நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! ஜெ. சொத்து குவிப்பு வழக்கு குறித்து கருணாநிதி!
சென்னை : ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதி என்றும் வெல்லும். எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
''குற்றவாளிகள் மீது கூறப்பட்டுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் காட்டப்படவில்லை என்பதால் இதைப் பொய் வழக்கு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்; ஒரு ரூபாய் மாத ஊதியமாகப் பெற்ற ஜெயலலிதாவுக்கு 66 கோடி ரூபாய் சொத்து உள்ளது என்பதை லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்புத் துறை உறுதிப் படுத்தியுள்ளது என்றும்; தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலை தான் நிலவுகிறது என்றும்;

65க்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை தேவையில்லாமல் சுட்டிக்காட்டியும் கூட, 20 சதவிகித அளவுக்குக் கூட எதிர்த் தரப்பில் ஆதாரங்களோடு வாதாடவில்லை என்றும்; இறுதியில் உண்மைகளை ஆராய்ந்து அதற் கேற்றபடி தீர்ப்பு வழங்குவேன் என்றும்; குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கும் எந்த ஆவணத்தையும், ஆதாரத்தையும் எதிர்த்தரப்பினர் தாக்கல் செய்யவில்லை என்றும்; டி.வி.ஏ.சி., பொய் வழக்கு போட்டுள்ளதாகச் சொல்வதற்குத் தேவையான ஆதாரத்தைக் கேட்டும் கொடுக்காமலேயே எதிர்த்தரப்பினர் வாதத்தை நிறைவு செய்துள்ளார்கள் என்றும்;
அரசுத் தரப்பில் 259 சாட்சிகளின் வாக்குமூலமும், புகார்கள் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் 2,341 ஆவணங்கள் தாக்கல் செய்து உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும்; நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த தீர்ப்பையே தானும் கொடுக்க வேண்டி வரும் என்றும்; கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கருத்த தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது. பொறுத்திருப்போம்; நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது!''
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications