தினகரன் எங்களை கூப்பிடலையே.. கிண்டலடிக்கும் ஓபிஎஸ்!
ஆகஸ்ட் 5ஆம் தேதி தலைமை கழகத்திற்கு வருமாறு தினகரன் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆகஸ்ட் 5ஆம் தேதி தலைமை கழகத்திற்கு வருமாறு டிடிவி தினகரன் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணைந்துவிடும் என ஈபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்காக கதவு திறந்தே இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனும் இரு அணிகளும் இணைய வேண்டும் கட்சிப் பலப்பட வேண்டும் என்று கூறினார். அதற்காகவே ஆகஸ்ட் 5ஆம் தேதி கட்சி நிர்வாகிகளை தலைமை கழகத்திற்கு அழைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகஸ்ட் 5ஆம் தேதி தலைமை கழகத்திற்கு வருமாறு டிடிவி தினகரன் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அணிகள் இணைப்பு குறித்து அமைச்சர்கள் யாரும் தன்னை அழைக்கவில்லை என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். தங்களுக்கு அழைப்பு விடுக்காமல் எப்படி கட்சியை இணைக்கப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினகரன், சசிகலா என மன்னார்குடி குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கினால் தான் பேச்சுவார்த்தை என ஆரம்பத்தில் இருந்து கூறி வந்த ஓபிஎஸ் தற்போது தினகரன் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கிண்டலாக கூறியுள்ளார்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications