டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டனர்.
சென்னை: நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்காத டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியார உத்தரவிட்டனர்.
அதிமுகவின் இணைப்பு நிகழ்ச்சிக்கு பிறகு முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கடிதம் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து தனது கவனத்துக்கு வராமல் நேரடியாக 19 பேரும் ஆளுநரை சந்தித்ததாக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சபாநாயகர் தனபால் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஜக்கையன், எடப்பாடி அணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 18 எம்எல்ஏக்களும் நேரடியாக விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டும் அவர்கள் சபாநாயகரை சந்திக்காமல் கூர்க் விடுதியில் தங்கியிருந்தனர்.

இதனிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஆளுநரிடமும், நீதிமன்றத்திடமும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூடி சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனால் ஆட்சியை கவிழ்க்க தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யக் கூடும் என்று எதிர்பார்த்த வேளையில் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இந்திய அரசியலமைப்பு அட்டவணை 10-இன் படி தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications