ஜெ. பிறந்தநாளுக்குள் புதியக்கட்சி தொடங்குகிறார் தினகரன்.. தங்க தமிழ்ச்செல்வன் தகவல்!
ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் டிடிவி தினகரன் புதியக் கட்சி தொடங்குவார் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

தேனி: ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் டிடிவி தினகரன் புதியக் கட்சி தொடங்குவார் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஏற்கனவே தேர்தல் ஆணையம் ஒதுக்கிய அதிமுக அம்மா என்ற பெயரில் பேரவை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் அதனை மறுத்த தினகரன் தனிக்கட்சி தொடங்குவது எத்தனை கஷ்டம் என்பது தனக்கு தெரியும் என்றார். இதைத்தொடர்ந்து தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் தான் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

பஸ்கட்டண உயர்வுக்கு
இந்நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் தேனியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், தமிழக அரசின் பஸ்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பாஜகவுக்கு அடிமையாக
7000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் மாதம் 3000 ரூபாயை பஸ் கட்டணத்துக்கு கொடுத்துவிட்டு எப்படி வாழ்வது என கேள்வி எழுப்பினார். இபிஎஸ், ஓபிஎஸ் பாஜகவுக்கு அடிமையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஓபிஎஸ் மறுக்க முடியுமா
தோல்வியை ஏற்க மறுத்துள்ள அவர்கள் மீசையில் மண்ணு ஒட்டினாலும் கீழே விழவில்லை என நடிக்கின்றனர் என்றும் சாடினார். ஓ.பி.எஸ்சை அமைச்சராக்கி, முதல்வராக்கி அழகு பார்த்தது டிடிவி தினகரன்தான் என்பதை ஓபிஎஸ் மறுக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாம்தான் ஆட்சி
மேலும் 18 சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தது செல்லாது இன்னும் 10 நாட்களில் தீர்ப்பு வரும் வந்த பிறகு சட்டமன்றம் செல்வோம் தீர்ப்புக்கு பிறகு நாம்தான் அதிமுக, நாம்தான் ஆட்சி, இரட்டை இலை நமக்குதான் என்று கூறிய அவர் பொருமையாக இருக்குமாறும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பொருப்பாளர்கள் நியமனம்
அதுவரை டிடிவி தினகரன் அணி அதிமுக அம்மா என்ற பெயரில் செயல்படும் என்ற அவர் மெஜாரிட்டி ஜாதி உள்ளவர்களுக்கு பொருப்புகளை வழங்கி பொருப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் புதிய பொருப்பாளர்கள் மாநில, மாவட்டம், ஒன்றிய, நகர வாரியாக நியமிக்கப்படுவார்கள் என்றும் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

விண்ணப்பங்கள் விநியோகம்
ஒரு சில மாதங்களில் டிடிவி தினகரன் தொகுதி தொகுதியாக ஊர் ஊராக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே டிடிவி தினகரனின் அதிமுக அம்மா அணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

விரைவில் தனிக்கட்சி
மேலும் தமிழகம் முழுவதும் தினகரன் ஆதரவாளர்களை திரட்டி செயல் வீரர்கள் கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன்மூலம் டிடிவி தினகரன் விரைவில் தனிக்கட்சி தொடங்குவார் என்பது உறுதியாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications