ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை நீக்க தினகரனுக்கு ஏது அதிகாரம்? கொதிக்கும் சேலம் எம்.எல்.ஏக்கள்!
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை நீக்க தினகரனுக்கு அதிகாரம் கிடையாது என்று சேலம் மாவட்ட அஇஅதிமுக எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அஇஅதிமுக( அம்மா) அணி துணை பொதுச் செயலாளர். டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள சேலம் மாவட்ட எம்.எல்.ஏக்கள்,' ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை நீக்க தினகரனுக்கு அதிகாரம் கிடையாது' என கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, சேலம் மாவட்ட எம்.எல்.ஏக்கள் வெங்கடாசலம், சக்திவேல் ஆகியோர் இன்று அளித்துள்ள பேட்டியில், " தினகரன் ஏற்கெனவே ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்.

தற்போது அ.இ. தி.மு.க.வில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள். அதனால் தினகரனுக்கு அ.இ. தி.மு.க.வில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை. தினமும் விளையாட்டு போல அவர் எதை, எதையோ செய்து வருகிறார்.
தினகரனை கட்சியினர் ஏற்காத நிலையில் அவர் புதிதாக நியமிக்கும் நிர்வாகிகளை எப்படி ஏற்க முடியும். சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதில் கட்சியினர் அனைவரும் ஒரே முடிவில் உள்ளோம்.
அப்படி, அவரை நீக்கும் போது அவரால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன் பதவி எப்படி செல்லும். தினகரன் ஆதரவாளர்கள் யாரும் சேலத்தில் இல்லாத நிலையில் அவர் எப்படி கட்சியை நடத்துவார்." என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்!












Click it and Unblock the Notifications