அதிமுகவின் ராணுவ கட்டுப்பாட்டுக்கு காரணமே எங்க குடும்பம்தான்... தினகரன் பொளேர்
அதிமுகவின் ராணுவ கட்டுப்பாட்டுக்கு காரணமே எங்க குடும்பம்தான் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தேனி: அதிமுகவின் ராணுவ கட்டுப்பாட்டுக்கு காரணமே நாங்கள்தான்; இன்றைய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களில் 90% பேர் எங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களே என தினகரன் கூறியுள்ளார்
தேனியில் செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
ஆளுநரிடம் 19 எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்துள்ளனர். அந்த கடிதம் மீது ஆளுநர் தக்க நடவடிக்கை எடுப்பார்.

புதுச்சேரியில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்கள் யாரும், எவருக்கும் அச்சப்பட்டு அங்கு தங்கவில்லை. அதிமுக என்னும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், தற்போது நிலவும் துரோக சூழலைப் புரிந்துகொண்டு அங்கு தங்கியுள்ளனர்.
அதிமுகவின் 122 எம்.எல்.ஏக்களும் எம்.எல்.ஏக்களும் எங்களின் ஆதரவாளர்கள் தான். நான் தஞ்சை சோழ மண்ணில் பிறந்திருந்தாலும் பாண்டிய நாடான தேனியில் இருந்துதான் முதன்முதலில் அரசியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
ஆகையால் இந்த பாண்டிய மண்ணை நேசிக்கிறேன். அதேபோல் ஓ.பன்னீர்செல்வத்தை தாக்க வேண்டும் என்பதற்காக நான் யாரையும் தரம் குறைந்து விமர்சிக்க மாட்டேன்.
ஜெயலலிதா இருந்தபோது ராணுவ கட்டுப்பாட்டுடன் அதிமுக இருந்தது. இதற்கு காரணம் நாங்கள்தான். இன்றைய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களில் 90% பேர் எங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்தான்.
இவ்வாறு தினகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications