(தப்பித் தவறி) தினகரன் முதல்வரானால்.. மாரியப்பன் கென்னடிக்கு அமைச்சர் பதவி உறுதி!
சட்டசபையில் இன்று பேசிய மானாமதுரை எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி திராவிட தலைவன் டிடிவி தினகரன் என புகழாரம் சூட்டினார்.
சென்னை: சட்டசபையில் இன்று பேசிய மானாமதுரை எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி, திராவிட தலைவன் டிடிவி தினகரன் என புகழாரம் சூட்டினார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிமுக தற்போது மூன்று அணிகளாக இயங்கி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி தரப்பு தினகரனுக்கு எதிராக திரும்பியதை தொடர்ந்து சசிகலா அணி தற்போது எடப்பாடி அணி தினகரன் அணி பிரிந்துள்ளது. எம்எல்ஏக்கள் பலர் டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி இன்று பேசினார். அப்போது டிடிவி தினகரன் திராவிடத்தின் தலைவன் என புகழ்ந்து தள்ளினார்.
ஏற்கனவே கூவத்தூர் விடுதியில் எம்எல்எக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது, அனைவரும் சுதந்திரமாக உள்ளதாக கூறினார். சுய விருப்பத்தின் பேரிலேயே அனைவரும் தங்கி உள்ளதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications