பரபரப்பான அரசியல் சூழலில், சசிகலாவை பார்க்க பெங்களூர் கிளம்பிய டிடிவி தினகரன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருக்கு சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் இன்று பெங்களூர் புறப்பட்டு சென்றார்.
அதிமுக அரசிலுள்ளவர்களே தினகரனை விமர்சனம் செய்வதால் அவர் அதிருபத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தனது ஆதரவு வட்டத்தை விரிவுபடுத்த என்ன செய்யலாம், அமைச்சர்களுக்கு செக் வைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து சசிகலாவுடன் ஆலோசிக்க அவர் பெங்களூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

நாளைதான் சசிகலாவை தினகரன் சிறையில் சந்திப்பார் என தெரிகிறது. முதல்வரால் தினகரன் ஓரம்கட்டப்பட்ட பின்னர் இந்த சந்திப்பு நடைபெறுவதால் முக்கியத்துவம் பெறுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் அவர் பெங்களூருக்கு பயணம் மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications