அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கிறது டிடிவி தினகரனின் அமமுக?
டிடிவி தினகரின் அமமுக கட்சி, அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் நிலையில் உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரின் அமமுக கட்சி 38 தொகுதிகளில் போட்டியிட்டது. தென் சென்னையில் மட்டும் அக்கட்சியின் ஆதரவுடன் எஸ்டிபிஐ வேட்பாளர் போட்டியிட்டார்.

இந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில், திமுக- அதிமுக இடையில்தான் நேரடி போட்டியாக இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அமமுக கட்சி மிக மோசமான வாக்கு எண்ணிக்கையை பெற்றிருக்கிறது.
அதிமுகவிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமமுக பல தொகுதிகளில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டிடிவி தினகரின் சொந்த ஊரான மன்னார்குடி உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் கூட அக்கட்சிக்கு பெரிய அளவில் வாக்கு விழவில்லை என்றே தெரிகிறது.
மேலும், போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அமமுக டெபாசிட் பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஒரு தொகுதியில் பதிவாகும் மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கையில் 6ல் ஒரு பங்கு ஓட்டுக்களை பெற்றிருந்தால்தான் டெபாசிட் தொகையை திரும்ப பெற முடியும்.
இந்த நிலையில், போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் தொகையை திரும்ப பெறும் அளவுக்கு அமமுக வேட்பாளர்களுக்கு ஓட்டுகள் விழவில்லை என்று தற்போதைய நிலவரப்படி தெரிய வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications