எதிர்பாராத திசையிலிருந்து தினகரனுக்கு கிடைத்த சிக்னல்

அதிமுகவை கட்டுப்பாட்டில் கொண்டுவர போராடும் தினகரன் இன்று மேலூரில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் தனி அணியாக விஸ்வரூபமெடுத்திருக்கும் தினகரன் ஆட்சிக்கு எதிராக மும்முரம் காட்டி வருகிறாராம். இன்றைய மேலூர் பொதுக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளை தினகரன் வெளியிட வாய்ப்புகள் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

அதிமுக என்கிற கட்சி தங்களது பிடியில் இருந்து நழுவிச் செல்வதை சசிகலா தரப்பு விரும்பவில்லை. ஆட்சியை கைப்பற்றுவது என்பதற்கு அப்பால் கட்சிதான் முக்கியம் என கருதுகின்றனர் சசிகலா தரப்பு.

இணைந்த கைகள்

இணைந்த கைகள்

இதற்காகவே ஒன்றாக கை கோர்த்து அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பகீரத பிரயத்தனம் மேற்கொள்கின்றனர். இதன் முதல் கட்டமாக மதுரை மேலூரில் இன்று பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரகசிய பேச்சு

ரகசிய பேச்சு

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிக முக்கியமான அரசியல் தலைவர் ஒருவரிடம் போனில் தினகரன் பேசியிருக்கிறார். அதிமுக ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அந்த தலைவரிடம் தினகரன் விவரித்தார் என கூறப்படுகிறது.

உற்சாகத்தில் தினகரன்

உற்சாகத்தில் தினகரன்

அந்த தலைவரும் சில ஆலோசனைகளைக் கூறினாராம். இதனடிப்படையில்தான் தினகரன் படு உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம்.

மேலூரில் அறிவிப்பு

மேலூரில் அறிவிப்பு

எதிர்பாராத திசையில் இருந்து கிடைத்த மிகப் பெரிய ஆதரவை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சசிகலா தரப்பு நினைக்கிறது. இதனைத்தான் இன்றைய மேலூர் பொதுக்கூட்டத்தில் பாருங்கள் என தினகரன் கூறி வருகிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+