மளிகைக் கடை பில் செட்டில்.. ஆன்லைன் ஷாப்பிங்.. ஆர்கே நகரை அதிரவைக்கும் தினகரன் பார்முலா
ஆர்கே நகரில் வெல்கிறாரோ இல்லையோ இடைத் தேர்தலுக்கே உரித்தான திருமங்கலம் பார்முலாவை தோற்கடித்துவிட்டார் தினகரன் என்றுதான் சொல்ல வேண்டும்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 11 பேர் கொண்ட குழுவை அமைத்து ரூம் போட்டு யோசிக்க வைத்திருப்பார்போல தினகரன். இடைத்தேர்தலுக்கே உரிய திருமங்கலம் பணப்பட்டுவாடா பார்முலாவை மிரட்டும் வகையில் இருக்கிறது ஆர்கே நகர் தொகுதியில் தினகரனின் பார்முலா.
ஆர்கே நகர் தொகுதியில் உச்சகட்ட பிரசாரம் களைகட்டியுள்ளது. அதேநேரத்தில் வெறித்தனமாக வாக்காளர்களை வளைக்கும் நூதன முயற்சிகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இப்படியுமா யோசிப்பாங்க?
அதிலும் வென்றால் முதல்வர் பதவி என்ற பேராசை வெறியில் வலம் வரும் அதிமுக(அம்மா) அணியின் தினகரன் கோஷ்டி கடைபிடிக்கும் யுக்திகள் திமுக, ஓபிஎஸ் அணிகளை வெலவெலக்க வைக்கின்றனவாம். இப்படியெல்லாம் கூடவா யோசித்து வாக்காளர்களை வளைக்க முடியும் என அதிர்ந்து போகும் அளவுக்கு ஆர்கே நகரில் காட்சிகள் அரங்கேறுகின்றனவாம்.

டார்கெட் மளிகை கடைகள்
ஒவ்வொரு தெருவாக போகும் தினகரன் கோஷ்டியினர் முதலில் மளிகை கடைகளை குறிவைக்கின்றனர். அந்த மளிகை கடையில் மாதந்தோறும் மளிகை சாமான்கள் வாங்குவது யார்? எவ்வளவுக்கு வாங்குகிறார்கள் என்கிற விவரத்தை சேகரிக்கிறதாம். பின்னர் அந்த வாடிக்கையாளர்களின் மாதாந்திர பில்லை மளிகைக் கடைகாரரிடமே செட்டில் செய்துவிட்டு அந்த வீடுகளுக்கு போகிறார்களாம். உங்கள் பில்லை செட்டில் செய்துவிட்டோம் தொப்பிக்கு வாக்களியுங்கள் என 'அன்பாக' கோரிக்கை விடுக்கிறார்களாம்.

ஆன்லைன் ஷாப்பிங்
அதேபோல் இளம்பெண்களிடம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளை காண்பிக்கின்றனர்.. புதியதாக வந்துள்ள சுடிதார், சேலை டிசைன்களை காட்டு உங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். அவர்கள் வாங்க விரும்பினால் டோக்கன் ஒன்றை கொடுத்து தொகுதிக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் போய் வாங்க சொல்கின்றனராம்.

புதுபுது பார்முலாக்கள்
நேரடியாக பணமாக கொடுத்தால்தானே பஞ்சாயத்து செய்கிறார்கள் என ரூம் போட்டு யோசித்து புது புது பார்முலாக்களை தினகரன் குரூப் அரங்கேற்றுகிறதாம்.. இந்த டோக்கன் சிஸ்டத்தை பார்த்து என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கிப் போயுள்ளனராம் இதர கட்சிகள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications