திமுக - காங். கூட்டணிக்கு செல்வது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்றது- சொல்வது யாருனு பாருங்க
திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு செல்வது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்றதாகும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கோவை: திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு செல்வது என்பது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்றதாகும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகரில் நேற்று நடைபெற்ற ஒரு விழாவுக்கு சென்ற டி.டி.வி தினகரனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரூ.20 நோட்டை கையில் வைத்துக்கொண்டு அவருக்கு எதிராக பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது தன்னை ஜெயிக்க வைத்தால் ஓட்டுக்கு ரூ.10000 தருவதாக தினகரன் உறுதியளித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

கூட்டணி இல்லை
ஹவாலா முறையில் டிடிவி தினகரன் வாக்காளர்கள் பணம் விநியோகம் செய்வதாக வந்த புகார்கள் மக்கள் போராட்டத்தின் மூலம் நிரூபணமாகிவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டியது. இதுகுறித்து கோவையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு நான் செல்லமாட்டேன்.

மனநலம் பாதிப்பு
திமுக- காங் கூட்டணிக்கு செல்வது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்றதாகும். திவாகரன் கூறிய கருத்துகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது.

மதுசூதனன் வேலை
ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது பணம் தருகிறோம் என்று எங்கள் கட்சியைச் சேர்ந்த யாரும் கூறவில்லை. ரூ.20 நோட்டை காட்டி ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மதுசூதனன் செய்த வேலை. அவர்தான் அவரது அடியாட்களை செட்அப் செய்து இதுபோன்று ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்.

நல்ல தீர்ப்பு வரும்
இந்திய வரைப்படத்தில் இருந்து தமிழகத்தையே மத்திய அரசு நீக்கிவிட்டது. 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு என்று தினகரன் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications