விஜயபாஸ்கரை போட்டு கொடுத்த கறுப்பு ஆடு யாரு? நெருக்கடியில் தினகரன்!
தினகரனுக்கு நெருக்கமான தென்மாவட்ட பிரமுகர்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து புள்ளி விவரங்களுடன் வருமான வரித்துறையிடம் போட்டுக் கொடுத்ததே தினகரனுக்கு மிக நெருக்கமான தென்மாவட்ட பிரமுகர்தான்....அவரை தூக்கியடியுங்க என தினகரனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம் அமைச்சர்கள்.
சசிகலா சிறைக்குப் போன பின்னர் அதிமுக, தினகரன் வசமானது. என்னதான் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோதும் நிழல் முதல்வராக தம்மை நினைத்துக் கொண்டிருக்கிறார் தினகரன்.

மீண்டும் வந்த தென்மாவட்ட பிரமுகர்
தினகரனுடன் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் கை கோர்த்துக் கொண்டு எடப்பாடிக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் ஓரம்கட்டப்பட்டிருந்த தென்மாவட்ட பிரமுகரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தார் தினகரன்.

தமக்கே முதலிடம்
அவருக்கு டெல்லி பதவியெல்லாம் கொடுத்து அழகு பார்த்தார் தினகரன். அதேநேரத்தில் அந்த பிரமுகரோ தினகரனுக்கு அடுத்ததாக தாம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால் அவருக்கு நெருக்கமான நபர்களை காலி செய்வதில் மும்முரம் காட்டியிருக்கிறார்.

சிக்கிய விஜயபாஸ்கர்
இதில் ஒன்றுதான் விஜயபாஸ்கர் தொடர்பாக புகாரும் கூட. அந்த தென்மாவட்ட பிரமுகர் தரப்பில் இருந்துதான் துல்லியமாக விஜயபாஸ்கர் தொடர்பான அத்தனை விவரங்களும் வருமான வரித்துறைக்குப் போனதாம். ஏற்கனவே சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலத்தில் தம்முடைய சைலண்ட் பார்ட்னர் விஜயபாஸ்கர் என கூறியிருந்தார்.

மீளவே முடியாதாம்...
அப்போது இருந்தே குறிவைத்து காத்திருந்த வருமான வரித்துறை வசமாக வளைத்துப் போட்டது விஜயபாஸ்கரை. இப்போது எந்த வகையில் விஜயபாஸ்கர் தப்பிவிடாதபடி பிடியை நெருக்கி வைத்திருக்கிறது வருமான வரித்துறை. இதனால் செம கடுப்பில் இருக்கும் விஜயபாஸ்கர் அமைச்சரவை சகாக்கள், அந்த தென்மாவட்ட பிரமுகர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் அவரை காலி செய்யுங்கள் என தினகரனுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனராம்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications