ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்: டி.டி.வி தினகரன் ஆவேசம்
ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் அரசியலில் இருந்தே காணாமல் போவார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.
திருச்சி : ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவருக்கும் இனி அரசியலில் இடம் இல்லை அவர்கள் காணாமல் போவார்கள் என்று அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்து உள்ளார்.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று திருச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் தினகரன். அப்போது சின்னம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கட்சியின் உண்மைத் தொண்டர்கள் எங்கள் பக்கமே இருக்கிறார்கள். ஆட்சியைக் கையில் வைத்துக்கொண்டு வெற்றுக்கூச்சல் போட்டுவரும் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவருக்கும் இனி அரசியலில் இடம் இல்லை. துரோக அரசியல் செய்யும் இருவரும் விரைவில் வருங்கால அரசியலில் இருந்தே காணாமல் போவார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பன்னீரிடம் இருப்பது சிறிய கூட்டமே. அதை விட சிறிய கூட்டமே எடப்பாடியிடம் இருக்கிறது. அவர்கள் இருவரும் இணைவதால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எம்.ஜி.ஆருக்கும் இது போல சிக்கல் ஏற்பட்ட போது உண்மைத் தொண்டர்கள் தான் அவர் பக்கம் இருந்தார்கள். எங்களிடம் இருப்பது உண்மைத் தொண்டர்கள் அதனால் நாங்கள் கவலைப்பட போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications