ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவாளர் அதிரடி கைது!
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் டிடிவி தினகரன் ஆதரவாளர் கருணாமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆதரவாளர் கருணாமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆர்.கே. நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக அம்மா கட்சி வேட்பாளர். டி.டி.வி. தினகரன் எப்படியாவது வெற்றி பெற்று முதல்வர் பதவியை பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக 30 அமைச்சர்கள், 30 எம்பிக்கள், 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.

பணம் பட்டுவாடா
ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை காண்பித்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாகவும், குறிப்பாக, வாக்காளர்களை தொகுதிக்கு வெளியே அழைத்து சென்று பணம் பட்டுவாடா செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வைரல் வீடியோ
பணம் விநியோகம் நடைபெறுவதை நிருபிக்கும் வகையில் ஆர்.கே. நகர் தொகுதியில் தொப்பி சின்னத்தை அணிந்து கொண்டு வீடு,வீடாக பணம் விநியோகம் செய்த வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.

திமுக புகார்
இந்நிலையில், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து வீடியோ ஆதாரங்களுடன் கூடிய புகார் மனு அளித்தார்.

தினகரன் ஆதரவாளர் கைது
இந்த புகாரின் அடிப்படையில் 38வது வார்டு வாக்காளர்களுக்கு தொப்பி அணிந்த நபர் பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவாளர் கருணாமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications