தினகரனின் வெற்றிக்கு முழு காரணமும் அந்த வெற்றிவேல்தான் மக்களே!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வாக்குகளை அள்ளுவதற்கு வெற்றிவேல்தான் காரணம்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வாக்குகளை அள்ளுவதற்கு அவரது ஆதரவாளர் வெற்றிவேல்தான் காரணம். வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோதான் தினகரன் வாக்குகளை குவிக்க காரணம் என கூறப்படுகிறது.
ஆர்கே நகர் தொகுதிக்கு பெரும் இழுபறிக்கு பின்னர் கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக்கட்சிகளும் சூறாவளி பிரச்சாரம் செய்தன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதால் ஸ்பெஷலாக பார்க்கப்பட்டது ஆர்கே நகர். இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றி ஜெயலலிதாவுக்கு பிறகு தாங்கள்தான் என காட்டிக்கொள்ள மும்முரமாக இருந்தன அரசியல் கட்சிகள்.

தலைமை நீடிக்கவில்லை
சசிகலா சிறைக்கு சென்றபின் அதிமுகவுக்கு தலைமை வகித்தார் டிடிவி தினகரன். ஆனால் அவரது தலைமை நீடிக்கவில்லை.

கை நழுவிய கட்சியும் ஆட்சியும்
ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட , 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியிலேயே இல்லாத தினகரன் தலைமையில் பணியாற்ற மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆட்சியும் கட்சி மற்றும் சின்னமும் கை நழுவி போனது.

ஆழம் பார்த்த குடும்பம்
தினகரனின் தலைமையே இந்த பின்னடைவுகளுக்கு எல்லாம் காரணம் என ஒட்டுமொத்த குடும்பமும் அனலை கக்கியது. ஆர்கே நகர் இடைத்தேர்தலை வைத்துதான் சசிகலா, திவாகரன், விவேக் ஆகியோர் தினகரனை ஆழம் பார்த்தனர்.

வெற்றிவேலின் மகத்தான பணி
இதனால் எப்படியாவது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் பெரும் அழுத்தத்துடன் வேலை பார்த்தார் டிடிவி தினகரன். தினகரனின் தலைமையை விரும்பிய அவரது ஆதரவாளர் வெற்றிவேல் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டு தினகரனின் வெற்றிக்கு வித்திட்டார்.

வெற்றிவேலே காரணம்
வாக்குக்கு எவ்வளவுதான் பணமும் குக்கரும் கொடுத்திருந்தாலும் தினகரன் வாக்குகளை அள்ள ஜெயலலிதாவின் அந்த வீடியோவே காரணம் என கூறப்படுகிறது. இதற்கு முழுமுதற் காரணமாய் இருந்த வெற்றிவேலுவின் மகத்தான பணியே தினகரனின் இந்த வெற்றிக்கு காரணம்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications