இவர்களே தான் வாழனுமா.. தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஏழுமலை சீற்றம்!
தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஏழுமலை ஆட்சி போனாலும் பரவாயில்லை, கட்சி தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.
புதுச்சேரி : இவர்களே தான் வாழ வேண்டுமா, ஆட்சி செய்ய வேண்டுமா என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஏழுமலை உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரின் பதவியை பறிக்க பரிந்துரைத்து அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகருடன் கடிதம் அளித்துள்ளதாகக் கூறினார். அதே வேளையில் தினகரன் ஆதரவு பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை தி விண்ட் ஃப்ளவர் ரிசார்ட் முன்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
எங்களுடைய விருப்பத்திற்கு நாங்கள் எங்கும் செல்லக் கூடாதோ. என்னுடைய வீட்டின் முன்பு 5 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், என்னுடைய குடும்பத்தாரை அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர், இது தான் ஈபிஎஸ் ஓபிஎஸ்ன் ஆட்சியா.

சாக வேண்டுமா?
நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 19 எம்எல்ஏக்களும் ஓபிஎஸ், ஈபிஎஸ் வீட்டின் முன் வந்து செத்து போய்விட்டால் சரியாகிவிடுமா. இவர்களே ஆட்சி செய்ய வேண்டுமா, இவர்களே வாழ வேண்டுமா வேறு யாரும் வரக் கூடாதா.

சேர்ந்து பாத்துக்கலாம்
தினகரன் என்ன சொல்கிறார் ஏழைகளுக்காக பாடுபடும் இந்த கட்சி தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தானே சொல்கிறார். துணை பொதுச்செயலாளர் தினகரனுடன் வந்து பேசுங்கள் ஒன்று சேருங்கள். கட்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

சசி சொல்வதை செய்வோம்
இன்று என்னடைய வீட்டின் முன் குண்டர்கள் அராஜகம் செய்தது போல நாளை மக்களுக்கும் நடக்கும் மக்களே நீங்கள் தான் இதற்கு ஒரு நியாயம் சொல்ல வேண்டும். 19 பேரின் பதவியை நீக்க உத்தரவிட்டுள்ளது குறித்து தினகரன், சசிகலா என்ன சொல்கிறார்களோ அதனையே செய்வோம்.
பதவி, ஆட்சி போனாலும் பரவாயில்லை எங்களுக்கு கட்சி தான் முக்கியம்.

தினகரன் அழைத்து செல்வார்.
ஈபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்து தினகரன் வந்து எங்களை அழைத்து செல்வார். சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி எனவே அவருடன் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும், என்றும் ஏழுமலை கூறினார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications