வாக்காளர்களுக்கு ஆர்.கே. நகர் "சமஉ" தினகரன் டுவிட்டரில் நன்றி

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் நன்றி தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கும் தொண்டர்களுக்கும் டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, பாஜ, நாம் தமிழர், தினகரன் அணி வேட்பாளர்கள் என மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

TTV Dinakaran thanked his voters

நேற்று வாக்கு எண்ணிக்கையால் ஆளும், எதிர்க்கட்சிகளை ஆச்சரியப்படவைத்து விடுவார் தினகரன். டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக தோற்று போனது.

இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தல் வெற்றியானது ஒட்டுமொத்த 6.5 கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்பு என்று தினகரன் கூறியிருந்தார். இனிமேல் நடப்பதை பாருங்க என்றும் அவர் பொடி வைத்து பேசியிருந்தார்.

இதையடுத்து வாக்காளர்களை புத்தாண்டு கழித்து நேரில் சென்று சந்திக்க திட்டமிட்டுள்ள தினகரன் டுவிட்டரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் ஆர்கே நகர் இடைத் தேர்தலில் எனக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றிப் பெற வைத்த எனது அன்புக்குரிய ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கும், எனது வெற்றிக்காக இரவு பகல் பாராது அயராது பாடுபட்ட பாசமிகு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், தோழமைகளுக்கும் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+