என் பதவியை மட்டும் பறித்தால் எடப்பாடி ஆட்சிக்கு ஊ....ஊ...ஊ...... மிரட்டல் விடுக்கும் தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமது கட்சி பதவியை பறித்தால் உடனே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்கவும் தயங்கமாட்டேன் என அதிமுக (அம்மா) கட்சியின் துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கட்சிப் பதவியைப் பெற்ற கையோடு ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டதை டெல்லி சகிக்கவில்லை. இதன்விளைவாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு, இடைத் தேர்தல் ரத்து என அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறியுள்ளன.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. அதேநேரத்தில் சசிகலா குடும்பத்துக்கு எல்லாமுமாக இருக்கும் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.

முதல்வர் நினைப்பில்...

முதல்வர் நினைப்பில்...

ஆனால் டிடிவி தினகரனோ தம்மை முதல்வராக கருதிக் கொண்டு அதெல்லாம் டிஸ்மிஸ் செய்யமாட்டோம் என அறிவித்திருந்தார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தி அடைந்தார். அவருடன் மூத்த அமைச்சர்களும் கை கோர்த்தனர்.

கறார் பேச்சு

கறார் பேச்சு

இதனிடையே தம்பிதுரை தலைமையில் மூத்த அமைச்சர்கள் தினகரனை நேரில் சந்தித்து ஆட்சியில் தலையிடுவதை டெல்லி விரும்பவில்லை அடக்கிவாசியுங்கள்.. இல்லையெனில் நாங்கள் இரண்டு அணிகளும் ஒன்றாகி கட்சி, ஆட்சியை காப்பாற்றி கொள்கிறோம் நீங்கள் கட்சி பதவியைவிட்டு விடுங்கள் என முகத்துக்கு நேராக கறாராக சொல்ல வெளிறிப் போனாராம் தினகரன்.

கவிழ்க்க தெரியாதா?

கவிழ்க்க தெரியாதா?

இதன்பின்னர் தன்னுடைய ஆதரவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய தினகரன், இந்த ஆட்சியையே உருவாக்கியது நான்.. 122 எம்.எல்.ஏக்களுக்காக செலவு செய்தது நான்.. என்னுடைய கட்சி பதவியையே பறிப்பாங்களாமா? இந்த ஆட்சியை உருவாக்க தெரிந்த எனக்கு கவிழ்க்கவும் தெரியாதா? என்ன என எகிறியிருக்கிறார்.

புலம்பி தவிக்கும் தினகரன்

புலம்பி தவிக்கும் தினகரன்

இதில்வெலவெலத்துப் போன அமைச்சர்கள் சிலர், நீங்க கொஞ்சம் பொறுமையாக இருங்க.. என்னதான் செய்கிறார்கள் என பார்ப்போம்.. அப்புறம் நாம முடிவெடுக்கலாம் என சொல்லியிருக்கின்றனர். ஆனாலும் அதிமுக மூத்த தலைவர்கள் தம்மை வேண்டா வெறுப்பாகவே பார்ப்பதை நினைத்து நினைத்து புலம்பித் தவிக்கிறாராம் தினகரன்.

அடுத்த கூவத்தூர் பார்சேல்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK (amma) party Deputy General Secretary TTV Dinakaran has threatened to topple the Edappai Palanisamy lead the TamilNadu Govt.
Please Wait while comments are loading...