ஜனாதிபதியை சந்திப்பது குறித்து தினகரன் முடிவெடுப்பார்.. செந்தில்பாலாஜி தகவல்!
தமிழகத்தில் அடுத்து நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி குறித்து முடிவெடுக்க ஜனா திபதியை சந்திப்பது குறித்து டிடிவி தினகரன்த
புதுச்சேரி: ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவது குறித்து டிடிவி தினகரன்தான் முடிவெடுப்பார் என்று புதுச்சேரியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில் பாலாஜி,
''பத்து எம்எல்ஏக்களை வைத்திருந்த பன்னீர்செல்வம், இந்த அரசை ஊழல் அரசு என்று கூறினார். அவருக்கு துணைமுதல்வர் பதவி தந்துள்ளார்கள். தற்போது சசிகலா, டிடிவி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.
பொதுக்குழுவை கூட்ட சசிகலாவுக்கு அதிகாரம் உள்ளது. நீக்கும், சேர்க்கும் பொறுப்பு அவருக்கு உண்டு. அதிமுகவை ஜெ. வழியில் சசிகலா நடத்துகிறார். நடத்தப்படுகிறது.

எம்.எல்.ஏ.க்கள்
டிடிவி தினகரனை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இன்னும் பல எம்எல்ஏக்கள் வருவார்கள். தொடர்ந்து பயணிக்கிறோம். வெற்றி நோக்கி எங்கள் பயணம் செல்கிறது.

அது தங்க தமிழ்ச் செல்வன் கருத்து
தமிழக ஆளுநர் அழைக்காவிட்டால் ஜனாதிபதியை சந்திப்பது தொடர்பாக வெளியான கருத்து எம் எல் ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்த கருத்துதான். ஆனால், ஜனாதிபதியை சந்திப்பது டிடிவிதான் முடிவு எடுப்பார். இலக்கை நோக்கி பயணிக்கிறோம். அதை எட்டும் வரை பயணம் தொடரும். டிடிவி வழிகாட்டுதல் படி பயணம் தொடரும்.

வசதிக்கு ஏற்ப பேசுகிறார்கள்
பொதுச்செயலராக சசிகலா பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டவர். அதை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குதான் உள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் பன்னீர் செல்வம். தற்போது ஈபிஎஸ் அவரை பொருளாளர் என்று கூறுகிறார். நீக்கப்பட்டதை மறந்துவிட்டு, மாற்று கருத்தை வசதிக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள்

பதவிக்காக இணைப்பு
ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு தொண்டர் இணைப்பு அல்ல, மக்கள் விரும்பும் இணைப்பும் அல்ல. பதவிக்காக நடந்ததுதான் இந்த இணைப்பு'' என கூறினார் செந்தில் பாலாஜி.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications