ஆர்.கே நகர் தேர்தல்.. காவேரி - நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் டி.டி.வி தினகரன் முன்னிலை

ஆர்.கே நகர் தேர்தல் குறித்து காவேரி - நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் டி.டி.வி தினகரன் முன்னிலை வகிக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆர்கே நகரில் தினகரனுக்கே வெற்றி எக்ஸிட் போல் முடிவுகள்....வீடியோ

    சென்னை: ஆர்.கே நகர் தேர்தல் குறித்து காவேரி - நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் டி.டி.வி தினகரன் முன்னிலை வகிக்கிறார். தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 37 சதவீத வாக்காளர்கள் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறியுள்ளனர்.

    இந்த கருத்து கணிப்பு மொத்தம் 1071 வாக்காளர்களிடம் நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் மொத்தம் 36 சதவீதம் பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

    27 சதவீதம் பேர் 35-45 வயதுடையவர்கள். 26 சதவீதம் பேர் 25-35 வயதுக்கு உட்பட்டவர்கள். 12 சதவீதம் பேர் 18-25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

    பணம் கொடுத்தார்களா?

    பணம் கொடுத்தார்களா?

    இந்த கருத்து கணிப்பில் வாக்காளர்களிடம் பணம் கொடுக்கப்பட்டதா என கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. இந்த கேள்விக்கு 10 சதவீதம் பேர் ஆம் என்றும் 90 சதவீதம் பேர் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களித்துள்ளீர்களா என்ற கேள்வியும் கேட்கப்பட்டு இருக்கிறது. இந்த கேள்விக்கு 3 சதவீதம் பேர் ஆம் என்று பதில் அளித்துள்ளனர். 97 சதவீதம் பேர் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    ஜெ வீடியோ

    ஜெ வீடியோ

    ஆர்கே நகர் வாக்குபதிவுக்கு முன் தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதாவின் சிகிச்சை பெறும் வீடியோ தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தியதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு 5 சதவீத மக்கள் ஆம் என்று பதில் அளித்தனர். மீதம் உள்ள 95 சதவீத மக்கள் இல்லை எனவும் பதிலளித்துள்ளனர். வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய விஷயமாக விளங்கியது எது என்ற கேள்விக்கும் பதில் அளித்தனர்.

    இதில் கட்சியை பிரதிபலிக்கும் பிரபல வேட்பாளர் என்று 34 சதவீதம் பேர் பதில் அளித்தனர். வேட்பாளருக்கு கட்சியில் உள்ள ஒற்றுமை என்று 30 சதவீதம் பேரும், வேட்பாளர் அளிக்கும் வாக்குறுதிகள் என்று 24 சதவீத பேரும் கூறியுள்ளனர்.

    பிரச்சனை

    பிரச்சனை

    தொகுதியில் இருக்கும் மக்கள் பிரச்சனைகள் குறித்த கேள்விகளுக்கும் இவர்கள் பதில் அளித்துள்ளனர். இதற்கு தண்ணீர் தட்டுப்பாடு என 39 சதவீதம் பேர் பதில் அளித்துள்ளனர். நகரின் சுகாதாரம் என 23 சதவீதம் பேரும், சாலை வசதி என்று 20 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். அதிகமாக டாஸ்மாக் கடைகள் என 14 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மேலும் பள்ளிகள் இல்லை என்று 4 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

    டிடிவி தினகரனுக்கு ஆதரவு

    டிடிவி தினகரனுக்கு ஆதரவு

    தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 37 சதவீத வாக்காளர்கள் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறியுள்ளனர். அதிமுக மதுசூதனனுக்கு 26 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களித்ததாக கூறியுள்ளனர். 3 வது இடத்தில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் 18 சதவீத மக்கள் ஆதரவை பெற்று இருக்கிறார். 4வது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 2 சதவீத வாக்குகளுடன் இருக்கிறார். 5வது இடத்தில் பாஜக வைச் சேர்ந்த கருநாகராஜன் 2 சதவீத வாக்குகளுடன் இருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+