"அதெல்லாம் முடியாது"... கிருஷ்ணப்பிரியாவுக்கு தினகரன் மறைமுக பதிலடி

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது குறித்து டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது குறித்து டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார். அதில் வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க முடியயாது என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவிற்கு மறைமுகமாக பதில் அளித்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டார். மிகவும் வைரலான இந்த வீடியோ குறித்து தற்போது டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

TTV replies to Kirshnapirya allegation on Vetrivel released the video emotionally

அவர் தனது பேட்டியில் "வெற்றிவேல் எனது நீண்டகால நண்பர். கட்சியையும் தாண்டி எங்களுக்கு இடையில் நல்ல நட்பு இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் ''என்னுடைய உறவினர்கள் கூறுவதற்காக அவர் மீது நடவடிக்கை எல்லாம் எடுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

ஜெயலலிதா வீடியோ வெளியான போது இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா "ஜெயலலிதாவை சசிகலா கொலை செய்துவிட்டதாக புகார் எழுந்த போது கூட அவர் சிகிச்சை பெறும் வீடியோவை சசிகலா வெளியிடவில்லையே. ஆனால் இப்போது வெளியிட்டு ஜெயலலிதாவின் சுயமரியாதையை இழக்க வைத்துவிட்டார்'' என்று தெரிவித்தார். மேலும் வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

தற்போது தனது பேட்டியின் மூலம் தினகரன் கிருஷ்ணப்பிரியாவிற்கு மறைமுகமாக பதில் அளித்து இருக்கிறார். இதன் காரணமாக வெற்றிவேல் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று உறுதியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+