உண்ணாவிரதப் பேச்சில் பாஜகவை ஒரு வரி கூட கண்டிக்கலையே... முதல்வருக்கு தங்கதமிழ்ச்செல்வன் கேள்வி!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பாஜக அரசு பற்றி முதல்வர் பழனிசாமி ஒரு வரி கூட கண்டிக்கவில்லையே என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பாஜக அரசு பற்றி முதல்வர் பழனிசாமி ஒரு வரி கூட கண்டிக்கவில்லையே என்று தங்கதமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக மீது முதல்வர் பழனிசாமிக்கு எவ்வளவு பயம் இருக்கிறது என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்அறிவிப்பின்றி திடீரென முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.

உண்ணாவிரத முடிவில் தொண்டர்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி பிரச்சனைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டினார். 1974ம் ஆண்டு திமுக ஆட்சியில், ஒப்பந்தத்தை புதுப்பித்திருந்தால் இன்றைக்கு நாம் போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்றும், சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் திமுக துரோகம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அதிமுக உண்ணாவிரதம் நடைபெற்றது. ஆனால் பாஜக அரசு குறித்து முதல்வர் வாய்திறக்காமல் திமுக, காங்கிரஸ் கட்சியை மட்டும் குற்றம்சாட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் முதல்வரின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி. தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன், உண்ணாவிரதப் பந்தலில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாஜகவை ஒரு வரி கூட கண்டிக்கவில்லையே என்று கூறியுள்ளார். பாஜகவிடம் பழனிசாமிக்கு எவ்வளவு பயம் என்பதை அவரது பேச்சே உணர்த்துகிறது.
முதல்வர் பழனிசாமி கடைசி வரை திமுக, காங்கிரஸை மட்டுமே குற்றம்சாட்டினார். ஆனால் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் தமிழக மக்களை வஞ்சித்த பாஜக அரசு பற்றி எந்த கருத்தையும் கூறவில்லையே என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
-
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications