வரலாறு காணாத விலையேற்றம்.. துவரம் பருப்பு விலை மூட்டைக்கு ரூ3,000 அதிகரிப்பு- ஒரே நாளில் "டபுளானது"
சென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் துவரம் பருப்பு விலை ஒரு மூட்டைக்கு ரூ3,000 அதிகரித்துள்ளது நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை துவரம்பருப்பு தற்போது ரூ20,000க்கு விற்பனையாகிறது.
வடமாநிலங்களில் பருப்பு விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளதால் தமிழகத்துக்கு வரத்து இல்லாமல் போனது. இந்த துவரம் பருப்பு பற்றாக்குறையை அறிந்த வியாபாரிகள் பதுக்கி வைத்துள்ளதை விற்பனைக்கு கொண்டு வராமல் உள்ளனர்.

பருப்பு பற்றாக்குறையினால் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் வரை துவரம் பருப்பு முதல் ரகம் ஒரு கிலோ ரூ.100 வரை வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் துவரம் பருப்பு விலை கடந்த 2 நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு ஏறியுள்ளது. 100 கிலோ கொண்ட துவரம் பருப்பு மூட்டை விலை நேற்று ரூ18,500 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் ரூ1,500 அதிகரித்து ஒரு மூட்டை விலை ரூ20,000ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2 நாட்களில் மட்டும் துவரம் பருப்பு ஒரு மூட்டைக்கு ரூ3,000 விலை அதிகரித்துள்ளது நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் சில்லறை கடைகளில் ஒரு கிலோ துவரம்பருப்பு விலை ரூ210க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் உளுந்து, பாசிப்பருப்பு உள்ளிட்டவையின் விலையும் மிகவும் அதிகமாக உயர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications