தூத்துக்குடியில் சுனாமி நினைவலைகள்... கடலில் பால் ஊற்றி மக்கள் வழிபாடு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடல்தாயை மலர்தூவி வழிபட்டதுடன், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுமத்ரா தீவில் கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக கடலில் சுனாமி ஏற்பட்டது. இந்தியா, இலங்கை, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுனாமியின் கோரத்தாண்டவத்தால் பலஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் சுனாமியால் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. இந்த சுனாமி தாக்குதலில் ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். பேரலையான சுனாமி அழிவு ஏற்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் அதனுடைய பாதிப்புகள் இன்றளவும் கடற்கரை கிராமங்களில் தொடர்கிறது.

சுனாமி பேரலையின் கொடிய தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடியில் கடற்கரைப்பகுதியான திரேஸ்புரம், மாதவன் காலனியில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள், பொதுமக்கள், சின்னச்சிறு குழந்தைகள் உள்ளிட்டவர்கள் கடல் தாய்க்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர்.
சுனாமி தாக்குதலில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் கடலில் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications