ரூ. 40 லட்சம் மதிப்பிலான உரத்துடன் லாரி கடத்தல்.. அதிரடியாக மீட்ட போலீஸ்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான உரத்துடன் கடத்தப்பட்ட லாரியை போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்தனர். லாரியை கடத்தி சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் செவக்காட்டு படடியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் இரவு தூத்துக்குடி தெர்மல்நகரில் உள்ள ஒரு தனியார் குடோனில் இருந்து 22 டன் எடையுள்ள உர மூட்டைகளை லாரிகளில் ஏற்றி கொண்டு ஈரோடு புறப்பட்டார்.
இரவு 9 மணிக்கு மதுரை பை பாஸ் சாலையில் உள்ள லாரி ஏஜென்சி முன்பு அட்வான்ஸ் தொகையை வாங்குவதற்காக லாரியை விட்டு விட்டு உள்ளே சென்றார். திருமபி வந்த பார்த்தபோது லாரியை காணவில்லை.
யாரோ அதனை கடத்தி சென்று விட்டனர். இது குறித்து சந்திரசேகர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் எஸ்பி ஆஸ்வின் கோட்னீஷ் மாவட்டம் முழுவதும் போலீசாரை உஷார்படு்த்தினார்.
இந்த நிலையில் பசுவந்தனை எஸ்.ஐ பொன் முனியசாமி மற்றும் போலீஸ்காரர் ஆகியோர் கோவில்பட்டி செல்லும் சாலையில் இரவு 9.50 மணிக்கு ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக உரமூட்டையுடன் வந்த லாரியை மடக்கி பிடித்தனர்.
22 டன் உர மூட்டையை கடத்தி சென்று சாயர்புரம் அருகே உள்ள சுந்தர்ராஜ் நகர் நாரயணன் மகன் கருப்பசாமி, இடையார்காடு பகுதியை சேர்ந்த குட்டிகுமார் மகன் சிவபாலன் ஆகிய இருவரையும் கைது செய்து லாரியை உரத்துடன் மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூபாய் 40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட உடனேயே போலீசார் உஷார் அடைந்ததால் அதிரடியாக மீட்க முடிந்ததாக கூறப்படுகிறது. லாரியை மடக்கி பிடித்த போலீசாரை எஸ்பி அஸ்வின் கோட்னீஷ் பாராட்டினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications