ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு- தென் மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரயில் மறியல்!
தூத்துக்குடி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், வனவிலங்கு பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தூத்துக்குடியில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி தூத்துக்குடி 2 ஆவது கேட் பகுதியில் தெற்கு மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் மணி, மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்கரன், இளைஞர் அணி துணைச் செயலளார் அந்தோணி உட்பட அக்கட்சியினர் 19 பேர் மைசூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த ரயிலை மறிக்க முயன்றனர். அவர்களை மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதேபோல் விருதுநகர், தஞ்சை, திண்டுக்கல், சிவகங்கையிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மற்றும் தமிழர் அமைப்பினர் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications