அமெரிக்க கப்பலுக்கு டீசல் சப்ளை - 7 பேரிடம் விசாரிக்க சுங்கத்துறைக்கு அனுமதி!

இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பலை கடந்த மாதம் 11ந் தேதி கடலோர காவல் படையினர் பிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கியூ பிரிவு போலீசார் கப்பலில் இருந்த மாலுமிகள் உள்பட 35 ஊழியர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 35 நவீன ரக ஆயுதங்கள், 5680 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 35 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் கப்பல் கேப்டன் டட்னிக் வாலாண்டின், தலைமை பொறியாளர் லலித்குமார், அவர்களுக்கு சட்ட விரோதமாக டீசல் சப்ளை செய்த 5 பேரிடமும் தனியாக விசாரணை நடத்திட அனுமதி கோரி சுங்கதுறை புலனாய்வு துறையினர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம் மனுவை விசாரித்த நீதிபதி, சென்னை புழல் சிறையில் இருக்கும் கப்பல் கேப்டன் டட்னிக் வாலண்டின், பாளையங்கோ்ட்டை மத்திய சிறையில் இருக்கும் லலித்குமார் ஆகியோரிடம் ஒருநாள் விசாரணை நடத்தவும், டீசல் சப்ளை செய்ததாக கைதான ஸ்ரீவைகுண்டம் சிறையில் உள்ள முருகேசன், செல்வம், மரிய ஆண்டன் விஜய், ரஞ்சித், விஜய் ஆகியோரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தவும் சுங்கத்துறையினருக்கு அனுமதி அளித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications