இந்திய சினிமாவையே மிரட்டும் தமிழ் பெண்! 'கிருஷ்ணாவதாரம்' படத்தில் பான்-இந்தியா ஸ்டாராகும் நிவாஷினி!
சென்னை: தமிழ் தொலைக்காட்சியில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நிவாஷினி கிருஷ்ணன், தற்போது, கிருஷ்ணவதார் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.
மே 7-ம் தேதி வெளியாகவுள்ள கிருஷ்ணவதார் பாகம் 1-ல், நிவாஷினி, கடவுள் கிருஷ்ணனுக்கு ஜோடியாக புராணப் பாத்திரமான ருக்மிணி வேடத்தில் நடித்துள்ளார்.

Creativeland studios Entertainment மற்றும் Athasrikatha Motion pictures நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் ஹர்திக் குஜ்ஜர் இயக்கியுள்ளார்.
தமிழ்நாட்டின் பரமக்குடியை பூர்வீகமாகக் கொண்ட நிவாஷினி, சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகத்தில் பேஷன் மீடியா துறையில் உயர் படிப்பை முடித்தவர்.
பல்வேறு டிவி தொடர்களில் நடித்து, தனது யதார்த்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிவாஷினி, விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஓஹோ என்தன் பேபி படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் இடம் பிடித்தார். 2022-ல் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த சீசனின் இளம் வயது போட்டியாளர் மற்றும் முதல் சிங்கப்பூர் போட்டியாளர் இவரே.
மேலும், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவேற்றும் இவரது புகைப்படத்தைக் காண, லட்சக்கணக்கானோர் இவரை பின்தொடர்கின்றனர்.
கிருஷ்ணவதார் படத்தின் மூலம் தற்போது முழு இந்திய சினிமாவிலும் தடம்பதிக்கிறார் நிவாஷினி. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என நான்கு மொழிகளிலும் வெளியாகிறது, இது அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக அமையும். இது ஒரு பான்-இந்தியா (Pan-India) படமாக உருவாகி வருகிறது. இதன் மூலம் அவர் தென்னிந்திய அளவில் ஒரு முக்கியமான நடிகையாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பெரிய திரையில் ருக்மிணி வேடத்தை உயிர்ப்பிக்கும் நிவாஷினி கிருஷ்ணன் மீது அனைவரின் கண்களும் பதிந்துள்ளன.
பூமராங் (Boomerang): தெலுங்கில் இவர் நடித்துள்ள இப்படம் 2026 டிசம்பரில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications