அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்த சபர்ணா... கொலையா? தற்கொலையா?
சென்னை: சென்னை ஆலப்பாக்கத்தில் இளம் நடிகை சபர்ணா ஆனந்த் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கையை அறுத்து தற்கொலை செய்த சபர்ணா உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. சபர்ணாவின் மறைவு, சின்னத்திரை உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சபர்ணா, கோவை அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. சைக்காலஜி படித்தவர். சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்துள்ள சபர்ணா, பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னை, மதுரவாயலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவர் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வரவே, அருகிலுள்ளவர்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பிரிந்த ஆண் நண்பர்
சென்னையில் தனது ஆண் நண்பருடன் லிவிங் டு கெதரில் இருந்ததாகவும், ஆண் நண்பர் தன்னை விட்டுப் பிரிந்த விரக்தியில் சபர்ணா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட சபர்ணா
போலீசார் கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார் சபர்ணா. அவர் உடல் ஆடையின்றி நிர்வாண நிலையில் இருந்ததாகவும், கை அறுக்கப்பட்டு இருந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், அவர் எழுதிய கடிதத்தைப் போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோகத்தில் சபர்ணா
சபர்ணாவின் சமீபத்திய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அனைத்தும் பிரிவை மையப்படுத்தியதாகவும், அன்புக்கு ஏங்குபவையாவுமே இருக்கின்றன. மேலும், தன் ஆண் நண்பருடன் இருந்த புகைப்படங்களையும் ஃபேஸ்புக்கில் இருந்து அவர் நீக்கியுள்ளார்.

அதிர்ச்சியில் தோழிகள்
சபர்ணாவின் உடல் நிர்வாண நிலையில் கிடந்ததால் கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சபர்ணாவின் மரணம் அவரது நண்பர்களையும், உறவினர்களையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. சபர்ணா உடன் நடித்த சில தோழிகள் அதிர்ச்சி விலகாமல் உள்ளனர்.

தைரியசாலி பெண்
சபர்ணா மிகவும் தைரியமான பெண். ஆனால் அவளுக்கு பெர்சனலாக நிறைய பிரச்சினைகள் இருந்தன. நண்பர்கள், உறவினர்களிடம் அதிகம் பாசத்துடன் பழகுவாள் என்றும் கூறினர். ஆனால் சபர்ணா இது போல ஒரு முடிவு எடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். உளவியல் படித்தவரே இந்த முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications