2000 கிலோ வெயிட்டு.. 101 அடி ஹைட்டு.. தவெக கொடி ஹைலைட்.. இதை செய்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

விக்கிரவாண்டி: வி.சாலையில் அமைக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட கொடிக் கம்பம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன? அதன் எடை என்ன? அது எப்படி வடிவமைக்கப்பட்டது என்பதைப் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

வெற்றிகரமாக விஜய் தன் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை நடத்திக் காட்டி இருக்கிறார். முன்கூட்டியே கணித்ததைவிடத் தொண்டர்களின் கூட்டம் பலமடங்கு அதிகமாகக் கூடியிருந்தது. சுமார் 5கிமீட்டர் தூரம் வாகனங்கள் வரமுடியாத அளவுக்குச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநாட்டில் ஹைலைட் ஆக 100 அடிக்கு ஒரு கொடிக் கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. அதை விஜய் ஏற்றிவைத்தார். இந்தக் கம்பம் நடப்பட்டுள்ள நிலம் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலம். ஆகவே, அதை 5 ஆண்டுகளுக்கு அகற்றக் கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக முன்பே செய்திகள் வெளிவந்திருந்தன.

vijay tvk

மாநாட்டில் கொடிக்கான விளக்கத்தை விஜய் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால், அவருக்குப் பதில் ஒரு ஏவி அவரது குரலில் ஒலித்தது. அதில் இந்தக் கொடியில் உள்ள யானைகள் போரில் வெற்றி பெறும் அசுர பலம் கொண்டவை என்பதால் பயன்படுத்தி இருக்கிறோம் என்றும் வாகை மலரும் வெற்றியின் அடையாளம். மன்னர்கள் போரில் வெற்றிபெற்றுத் திரும்பும்போது வாகை மலரை வெற்றியின் சின்னமாக தருவது தமிழர்களின் மரபு. ஆகவே அதைப் பயன்படுத்தி இருக்கிறோம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்தப் பிரம்மாண்ட கொடிக் கம்பத்தைப் பற்றிப் பல செய்திகள் இப்போது கிடைத்துள்ளன. சுமார் 100 அடி உயரத்திற்கு இது நிறுவப்பட்டுள்ளது. இதை அமைத்த பணியாளர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், "பனையூரில் உள்ள விஜய் கட்சியின் தலைமை நிலையத்தில் அமைக்கப்பட்ட கொடிக் கம்பத்தையும் நாங்கள்தான் செய்திருந்தோம். இது 40 அடி உயரம்தான். கொடியை கையினால் ஏற்றிவிட முடியும். ஆனால், விக்கிரவாண்டி வி.சாலையில் போடப்பட்டுள்ள கம்பம் கையினால் கொடியை ஏற்றமுடியாது. கொடியை மோட்டர் மூலமே ஏற்ற முடியும். அதற்காகத் தனி மோட்டர் வசதி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் உள்ள கொடி கீழே இருந்து மேலே செல்வதற்குக் குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும். கொடியின் அளவு 20 அடிக்கும் 30 அடி இருக்கும். சரியாகச் சொன்னால் 600 சதுர அடி வரும். கொடிக் கம்பத்தின் உயரம் 101அடி. அதன்மேலே கூடுதலாக 4 அடி இடி தாங்கி உள்ளது. அதில் மின் விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. வெறுமனே இடி தாங்கி இல்லாமல் அங்கே கலசம்போன்று ஒரு டிசைன் செய்துள்ளோம். அது கொடிக்கு இன்னும் அழகு கொடுக்கும். எங்கள் கொடிக் கம்ப கலசத்திற்கு என்று தனி மாடல் உள்ளது. அதையே இதிலும் பயன்படுத்தி இருக்கிறோம்.

சுமார் 100 அடிக்கு மேல் கம்பம் அமைக்கப்பட்டால் அதன் மீது சிகப்பு மின் விளக்கு வைக்கவேண்டும்.மேலே விமானங்கள் பறக்கும் என்பதால் விதிப்படி அது கட்டாயம். ஒரே பகுதியாக கொடிக் கம்பம் இருக்காது. மூன்று பகுதிகளாகப் பிரித்துச் செய்துள்ளோம். அப்படி என்றால்தான் அதை ஒரு இடத்தில் மற்றொரு இடத்திற்கு எளிமையாக எடுத்துச் செல்ல இயலும். கொடிக் கம்பத்தின் மொத்த எடை 2000 கிலோ இருக்கிறது.

vijay tvk

கொடிக்காக உள்ள கயிறு எஸ்.எஸ். ஸ்டீல் கம்பியால் ஆனது. அது துருப்பிடிக்காது. இந்தக் கம்பி மோட்டார் மூலம் மேலே ஏற்றவும் இறக்கவும் செய்யலாம். மேலே போகும் கம்பியை அங்குள்ள டிரம் சுற்றி வைத்துக் கொள்ளும். அதேபோல் கீழே ஒரு டிரம் உள்ளது. அது கொடி கீழ் இறங்கும் போது சுற்றி வைத்துக்கொள்ளும். இந்தக் கம்பமும்கூட துருப்பிடிக்காது. பல ஆண்டுகள் தாங்கும் வலிமையான இரும்புகளைக் கொண்டு செய்துள்ளோம். இந்தக் கொடியை சுமார் ஒரு கிமீட்டர் தூரத்திலிருந்து அடையாளம் காணமுடியும். வி.சாலை என்பது கட்டடங்கள் இல்லாத விவசாய பூமி. எனவே இன்னும் கூடுதலான தூரத்திலிருந்து பார்க்க முடியும்." என்கிறார்.

இதே நிறுவனம்தான் திமுக அறிவாலயத்தில் உள்ள கொடிக் கம்பத்தை அமைத்துள்ளது. விசிக அலுவலகத்தில் கொடியும் இவர்கள் தயாரித்ததுதான். காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் எனப் பலருக்குக் கொடிக் கம்பம் தயாரித்து அளித்துள்ளனர். தொடர்ந்து பேசிய இந்த ஊழியர், "தவெக தலைமை நிலையத்தில் கொடிக் கம்பம் அமைத்துக் கொடுத்த போது டம்மியாக ஒரு கொடியை விஜய் ஏற்றிப் பார்த்தார். அப்போது கூட கட்சிக் கொடி எங்களுக்குத் தெரியாது. அடுத்த நாள் அவர் அறிமுகம் செய்த போதுதான் பார்த்தோம்" என்கிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+