வேல்முருகன் மீது எப்படி பொய் கேஸ் போடலாம்: செல்போன் டவரில் ஏறி த.வா.க.வினர் ஆர்ப்பாட்டம்
கடலூர்: கடலூர் மாவட்ட பாமக நிர்வாகி ஆறுமுகம் உள்பட 7 பேர் அரிவாளால் வெட்டப்பட்டது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட அக்கட்சியினர் 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை கண்டித்து வேல்முருகன் கட்சியினர் செல்போன் டவர் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாமக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(42). அவர் கடந்த சனிக்கிழமை தனது ஆதவாளர்களுடன் காடாம்புலியூருக்கு சென்றுவிட்டு நெய்வேலிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் மற்றும் ஆதரவாளர்கள் 6 பேரை மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் உள்பட 7 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆறுமுகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தாக்கியதாகக் கூறி அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட 55 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் இருக்கும் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.
பொய்வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்தும், வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் மங்களுர் ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தலைமையில் 10க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை திட்டக்குடி போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி தவிர சேலம், தஞ்சை, திண்டுக்கல், உளுந்தூர்பேட்டை, கிருஷ்ணகிரி, வேலூர், ஓமலூர் என பல இடங்களிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications