இஸ்லாமியப் பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரமலான் வாழ்த்து!
இஸ்லாமியப் பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளது.
சென்னை: இஸ்லாமியப் பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான ரம்ஜான் திருநாள் வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
அன்பு, நன்மை, ஈகை, இச்சையடக்கம் என்னும் மேன்மைகளைப் படைத்த திருக்குர்ஆன்! மனித வாழ்வின் ஒளியாகவும் வழியாகவும் திகழும் திருக்குர்ஆன்! பேரண்டத்தின் திருமறையாம் திருக்குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதம் நம்பிக்கை அளிக்கும் மாதம்!
தீமைகளினின்றும் விடுபட உள்ளத்திற்கு உரமூட்டும் மாதம்!தூய ரமலான் மாதம் முழுவதன் தவ இருத்தல் நிறைவு ரமலான் பெருநாள்! இப்பெருநாள் விடுக்கும் செய்தி, எல்லாரோடும் இணக்கம் கொள்ளுங்கள்; இல்லாதோருக்கு உதவி செய்யுங்கள் என்பதாகும்!
இதனையே வாழ்வின் பொருளாக ஏற்று, ஈகைப் பெருநாளில் வறியவர்க்கு "ஜக்காத்" வழங்குவதன் மூலம் பிறர்க்கீந்து மகிழ்ச்சிகொள்ளும் எம் இனிய இஸ்லாமியப் பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தூய ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications