ஈழத் தமிழர்களை சித்ரவதை செய்யும் சிறப்பு முகாம்களை உடனே இழுத்து மூடுக.. வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் என்ற போர்வையில் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அத்தனை ஈழத் தமிழ் உறவுகளையும் உடனே பொதுமுகாம்களுக்கு மாற்ற வேண்டும் அல்லது அவர்கள் விரும்புகிற வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு முகாம்களையும் நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 24-ந் தேதியன்று திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்த உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழர்களை அடைக்கும் சிறப்பு முகாம்கள்
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாதத்தின் இனப் படுகொலை அழித்தொழிப்பில் இருந்து தப்பி தாய் தமிழகத்துக்கு வருகிற ஈழத் தமிழ் உறவுகளில் சிலர் சட்டங்களை மீறியதற்காக கைது செய்யப்பட்டு அடைக்கப்படுகிற இடமாக சிறப்பு முகாம்கள் இருந்து வருகின்றன.

கொட்டடி முகாம்கள்
ஆனால் இப்படி கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு அவர்கள் உரிய தண்டனை காலத்துக்குப் பின்னர் விடுவிக்கப்படாமல் தொடர்ந்து கொட்டடி முகாம்களிலேயே அடைத்து வைக்கப்படுகின்றனர்.

பல கட்டப் போராட்டங்கள்
செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, திருச்சி சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத் தமிழ் உறவுகள் தங்களை விடுதலை செய்யக் கோரி பல கட்டப் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்; அண்மையில் கூட திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் தம்பதியினர் தற்கொலைக்கும் முயன்றிருக்கின்றனர்.

முட்டுக்கட்டை போடும் மத்திய அரசு
இத்தகைய சிறப்பு முகாம்களை இழுத்து மூடி இதில் உள்ள ஈழத் தமிழ் உறவுகளை பொதுமுகாம்களிலோ அல்லது அவர்கள் விரும்புகிற வெளிநாட்டுக்கு சிறப்பு நேர்வின் அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை. ஆனால் மத்திய அரசு இந்த சிறப்பு முகாம்களை மூடுவதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

திபெத்தியர்களுக்கு உள்ள உரிமை கூட தமிழர்களுக்கு இல்லை
இந்திய தேசத்துடன் தொப்புள் கொடி உறவே இல்லாத திபெத்திய அகதிகள் இந்த மண்ணில் சொர்க்க வாழ்க்கை வாழ்கிற போது எங்கள் தொப்புள் கொடி உறவாகிய ஈழத் தமிழ் உறவுகள் அகதிகளாக வந்த போதும் நரக வாழ்க்கை வாழுகிற அவலம் நீடித்துக் கொண்டிருக்கிறது.

ஈழத் தமிழர்கள் மீது அக்கறை இல்லை
திபெத்திய அகதிகளுக்கு காட்டும் கரிசனையை தமிழீழ உறவுகளுக்கு இந்திய அரசு ஒரு நாளும் காட்டியதும் காட்டப்போவதில்லை. ஈழத் தமிழ் அகதிகளுக்கு மாநில அரசுதான் அத்தனை உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது.

நிரந்தரமாக மூடுக
இத்தகைய சூழலில் சிறப்பு முகாம்கள் என்ற போர்வையில் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அத்தனை ஈழத் தமிழ் உறவுகளையும் உடனே பொதுமுகாம்களுக்கு மாற்ற வேண்டும் அல்லது அவர்கள் விரும்புகிற வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு முகாம்களையும் நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும்.

திருச்சியில் முற்றுகைப் போராட்டம்
இந்தக் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 24-ந் தேதியன்று திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்த உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications