வேல்முருகன் கட்சி போட்டியிடாத இடங்களில் மநகூ, நாம் தமிழர், பாமக, பச்சை தமிழகம் கட்சிகளுக்கும் ஆதரவு!
நெய்வேலி: அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தாம் போட்டியிடாத இடங்களில் தமிழர் நலனுக்கு குரல் கொடுக்கும் மக்கள் நலக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி , உதயகுமாரின் பச்சை தமிழகம், பொன்ராஜின் அப்துல்கலாம் கட்சி உள்ளிட்ட தமிழர் மற்றும் இளைஞர் நலன்சார்ந்து குரல் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிப்போம் என்று அதன் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் அறிவித்துள்ளார். மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆதரவைக் கோரினால் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் ஆதரவளிப்போம் என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அக் கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி விலகியது.

இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் அவசர பொதுக்குழுக் கூட்டம் நெய்வேலியில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சட்டசபை தேர்தல் தொடர்பாக இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பண்ருட்டி வேல்முருகனுக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி வேல்முருகன், சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியா? இல்லையா? என்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரிவிக்கிறேன்.

அதே நேரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடாத இடங்களில் மக்கள் நலக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, பாமக, பச்சை தமிழகம் என தமிழர் நலன் சார்ந்து தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிப்போம்.

இதர தமிழ்த் தேசிய இயக்கங்கள், கட்சிகள் எங்களது ஆதரவைக் கோரினாலும் ஆதரவளிப்போம். எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ், பாஜகதான் தமிழர் விரோத கட்சிகள். ஆகையால் இந்த இரு கட்சிகள் இல்லாமல் தமிழர் நலன் சார்ந்து இயங்கும் கட்சிகளை அது பாமகவாக இருந்தாலும் ஆதரிப்போம்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications