கர்நாடகவுக்கு எதிரான நாளைய முழு அடைப்புக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு- வேல்முருகன்
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாளை தமிழகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்பிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் தழுவிய அளவில் விவசாய மற்றும் வணிகர் சங்கங்கள் நாளை நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்கக் கூடாது என்று அங்குள்ளவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் தமிழர்களை கொடூரமாக தாக்கியும் தமிழர் சொத்துகளை தீக்கிரையாக்கியும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைத்துள்ளனர். ஒரே நாளில் பல நூறு வாகனங்களை எரித்துள்ளனர். மேலும், தர்மபுரி பாலக்கோட்டைச் சேர்ந்த நவாஸ் பாஷாவின் குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்லவும் முயற்சி செய்துள்ளனர்.
இந்தக் கொடுமைகளை கட்டுப்படுத்தாத கர்நாடக அரசைக் கண்டித்து நாளை நடைபெறும் முழு அடைப்பிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications