உடல் ஆரோக்கியத்திற்காக ஓட்டம்.. வெற்றிகரமாக 3வது வருடத்தை கொண்டாடும் சென்னை அமைப்பு
13 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது 325 உறுப்பினர்களை கொண்ட பெரிய அமைப்பாக மாறியுள்ளது.
சென்னை: ஓடுவதை வாழ்க்கையின் அங்கமாக மாற்றி வைத்துள்ள டவர் ட்விஸ்டர் அமைப்பு தனது 3வது வருட தொடக்க விழாவை கொண்டாடியுள்ளது.
உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்சினைகளை கட்டுக்குள் வைக்க ஓட்டம் உதவுகிறது. எனவே வாழ்க்கை முறை நோய்களை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் சென்னையில் 3 வருடங்கள் முன்பு ஆரம்பிக்கப்பட்டதுதான், towertwisters அமைப்பு.

13 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது 325 உறுப்பினர்களை கொண்ட பெரிய அமைப்பாக மாறியுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி இந்த அமைப்பின் 3வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. 10 ஆயிரம் மீட்டர், 5 ஆயிரம் மற்றும் 3ஆயிரம் மீட்டர் தூர ஓட்டங்களுடன் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த ஓட்டம், சென்னை, அண்ணாநகர் ரவுண்டானா அருகேயுள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த வருட ஓட்டம் மேலும் பலரையும், ஓட்டத்திற்கு அடிமையாக்கும் என எதிர்பார்க்கிறோம் என்கிறார்கள் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள்.
3ம் ஆண்டு விழாவையொட்டி வரும் 9ம் தேதி நடைபெற உள்ள ஓட்டத்தில் பங்கேற்க http://www.towertwisters.com என்ற வெப்சைட்டில் முன்பதிவு செய்யலாம். நீங்களும் வாய்ப்பை தவற விடாமல் பங்கேற்கலாமே.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications