ஜூலி மோசம்.. காயத்ரி அதுக்கு மேல.. விளாசித் தள்ளிய ஸ்ரீபிரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு மக்கள் ஆதரவு பெருகிவருவதைபோல் சினிமா துறையினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் ஆதரவு பெருகும் ஓவியா எங்கே டைட்டிலை வென்று விடுவாரோ என்ற பொறாமையின் காரணமாக அவரை தவறாக சித்தரிக்கும் சதியில் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் உள்ளனர்.

இதற்கு மத்தியில் ஓவியாவின் செயல்பாடுகள், அவரின் குணங்கள், துஷ்டனை கண்டு தூர ஒதுங்கும் பண்பு ஆகியவை மக்கள் அவரை விரும்ப காரணமாகிவிட்டன.

செட்டையே பிரிச்சாலும்...

ஆர்ட் டைரக்டர் வந்து பிக்பாஸ் செட்டையே பிரிச்சி எடுத்துட்டு போர வரைக்கும் ஓவியா அங்கதான் இருப்பார். எனவே அவரை நாமினேட் செய்து உங்கள் நேரத்தை வீணாடிக்காதீர் என்கிறார் நடிகர் சதீஷ்.

மகா நடிப்பு...

ஓவியா நடிக்கிறாங்க- ஜூலி. இது எப்படி இருக்கு தெரியுமா, கஞ்சா கருப்பு என்னை கலாய்க்கிறாருனு கவுண்டமணி சொன்ன மாதிரி இருக்கு.

ஒதுங்கி விட வேண்டும்

ஒருவர் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமானவராக இருந்தால், அவரை குறை கூறுவது, அவர் மீது கரம் வைப்பதை காட்டிலும் ஒதுங்கி விடுவதே நல்லது என்கிறார் எஸ்டிஆர்.

ஜூலி ஒரு மோசமான நடிகை...

ஜூலி ஒரு மோசமான நடிகை என்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா. அப்ப காயத்ரி என்று இன்னொருவர் கேட்க, அவரும்தான் என்று பெயரைக் கூடக் குறிப்பிடாமல் அறுவறுப்பு காட்டியுள்ளார் ஸ்ரீபிரியா.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தையால் காயத்ரி, ஓவியாவை நேற்று திட்டினார். ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை. இனி அது போல் பேசாமல் அவர் எச்சரிக்கப்படுவார் என்பதை நம்புவோம்.

மனஉறுதி எனக்கு இன்ஸ்பிரேஷன்

ஒவியாவிற்கு தந்தை இல்லை தாயாருக்கோ புற்று நோய் என்று முன்பு என்னிடம் சொன்னார்,அவரும் இருக்காரான்னு தெரியாது,அவர் மனஉறுதி எனக்கு இன்ஸ்பிரேஷன் என்கிறார் சீனு ராமசாமி.

முகத்தை பார்க்கும் போதே தெரிகிறது

ஓவியா மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பாக் என்று நினைக்கிறேன். அது அவரது முகத்தில் நன்றாகவே தெரிகிறது. பிறருக்கு பின்னால் வம்பு பேசாதவர். சன்ஷைன் கேர்ள். அவருக்கு என் பாராட்டுகள்.

ஓவியாவுக்கு பிக்பாஸ் உதவுவார்

ஓவியாவுக்கு பிக்பாஸ் உதவுவார் என்கிறார் நடிகர் கருணாகரன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Julie is a worst actor, says Sripriya in her twitter page. She also concerned for Oviya
Please Wait while comments are loading...