பிரச்சனைன்னா குடிக்க போவோம்!... ஆனால் குடிக்கே பிரச்சனைன்னா எங்கய்யா போறது!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுபான பாட்டில்களின் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதை சாதக,பாதகங்கள் குறித்து காமெடியான கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

சென்னையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டது. அத்துடன் மதுபானங்களின் விலையும் ஏற்றப்படுதவாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ரூ.150 கோடி

எப்படியும் தீபாவளினா 100 கோடி கலெக்ட் பண்ணும்.. இப்போ ரூ.150 கோடியாக்க பிளான் பண்ணிட்டாங்க...
#டாஸ்மாக் விலை உயர்வு # அடுத்த வாரம் தீபாவளி

இலுமினாட்டி சதிதான்

மதுபானம் விலை உயர்வு என்பது இலுமினாட்டியின் சதிதான் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

விலை ஏற்றம்தான்

பூரண மது விலக்கிற்கான முதல் படி, மது விலை ஏற்றம்...

மதுபானங்களுக்காக அமைச்சரவை

மதுபானங்களின் விலையை உயர்த்த அமைச்சரவையை கூட்டியிருப்பது இந்த எடப்பாடி அரசால் மட்டுமே முடியும்.

தேவையில்லை

மதுபானங்கள் விலை உயர்வு..
குடிப்பவர்களுக்கு போராட திராணியுமில்லை..
குடிக்காதவர்களுக்கு போராட தேவையுமில்லை..
சுரண்டல்

அப்பாடா...

மதுவிலக்குலா கிடையாதுலே
மது'வெல தா ஏறுதுலே!!...

தரமாட்டங்க


ஏற்கனவே 5 ரூபா தர மாற்றானுங்க..
இனி 8 ரூபா தர மாட்டானுங்க...

குடிக்கே பிரச்சினைன்னா

எங்க, எந்த பிரச்சனைனாலும் குடிக்க தான் போவாங்க இப்ப அந்த குடிக்கே பிரச்சனைனா எங்கயா போறது...

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN government increased the price hike of Tasmac. Netisans commented on this issue in Twitter.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற