ஆயிரக்கணக்கான அர்பன் நக்சல் உருவான பள்ளி.. ஆசான் பெரியார்.. வியக்க வைத்த டிவிட்டர் வைரல்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று!!- வீடியோ

    சென்னை: பெரியார் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில், #HBDPeriyar140 என்ற ஹேஷ்டேக் வைரலாகி உள்ளது.

    உன் சாத்திரத்தை விட உன் முன்னோரை விட உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. இந்த வாக்கியத்தை உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதன் வீரியம் அப்படியேதான் இருக்கும். எந்த நாட்டில் இதை சொன்னாலும் பெரிய கலகமே உருவாகும். இந்த வாக்கியத்தை இப்போதும் கூட பொதுவில் சொல்ல பலருக்கு அச்சம் இருக்கும். ஆனால் இதை இந்தியா பல பிற்போக்கு தனங்களில் கட்டுண்டு கிடந்த போதே தைரியமாக சொன்னவர்தான் பெரியார்!

    அவர் இப்போது இருந்திருந்தால் நம் மத்திய அரசு கூட அவருக்கு அர்பன் நக்சல் என்றுதான் பெயர் சூட்டி இருக்கும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் சுதந்திர இந்தியாவின் முதல் அர்பன் நக்சலாக இவராகத்தான் இருந்திருப்பார்.

    திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என தமிழகத்தில் 70 வருட அரசியலுக்கு "அ'' போட்டவர் பெரியார். கடவுளை மற ! மனிதனை நினை ! என்று கோவில்களுக்கு முன் நின்று கூவியவர் பெரியார்.

    நம் மனித குலம் ஒவ்வொரு முறையும் சில கண்டுபிடிப்புகளுக்கு பின் பெரிய மாற்றத்தை சந்தித்து இருக்கிறது. சக்கரத்தை கண்டுபிடித்தது, தீயை கண்டுபிடித்தது, மின்சாரத்தை கண்டுபிடித்தது என்று. இதை கண்டுபிடித்தவர்கள் இந்த உலகிற்கு என்ன பயனை கொடுத்து இருக்கிறார்களோ அதே அளவு பயனை பெரியார் தன்னுடைய பகுத்தறிவு மூலம் கொடுத்துள்ளார்.

    இப்போது மருத்துவ துறை தொடங்கி கல்வி, பொது சுகாதாரம் என அனைத்திலும் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. இது அத்தனைக்கும் பெரியார் போட்டுக்கொடுத்த பகுத்தறிவு கொள்கைதான் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். இப்படிப்பட்ட மனிதரின் பிறந்தநாளை இன்றைய பகுத்தறிவுவாதிகள், #HBDPeriyar140 என்ற ஹேஷ்டேக் மூலம் கொண்டாடினார்கள்.

    பெண்

    பெண் கல்விக்கும் பெண் விடுதலைக்கு அடித்தளமிட்ட இவரை இதை விட வேறு எப்படி வர்ணிப்பது.

    ஜோதிமணி டிவிட்

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி ''ஆசான் 🙏 ஆயிரக்கணக்கான அர்பன் நக்சல் உருவான பள்ளிக்கூடம்'' என்று பெரியாரை புகழ்ந்துள்ளார்.

    இந்த பெண்

    டிவிட்டரில் தொடர்ந்து தனது தமிழ் போஸ்டுகளால் கவர்ந்து வரும் அமெரிக்க பெண்ணான சமந்தா ஜோ ''பெண்கள் மற்றும் சாதி சமநிலைக்காக விடாது போராடிய இவரின் வாழ்க்கையை படிக்க வியப்பாக உள்ளது'' என்று பெரியார் குறித்து டிவிட் செய்துள்ளார்.

    ராமசாமிக்கு வாழ்த்து சொன்ன குமாரசாமி

    பெரியாரின் தேவையை, மாநில உரிமையை சமீப காலமாக அதிகம் உணர்ந்து உள்ளது கர்நாடக மாநிலம். தற்போது கர்நாடக முதல்வர் குமாரசாமி ''140வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெரியார்'' என்று வாழ்த்தியுள்ளார்.

    தத்துவம்

    "கடவுளை மற, மனிதனை நினை" இதைவிட பெரிய வாழ்க்கை பாடத்தை கற்றதில்லை என்று இவர் கூறியுள்ளார்.

    காலா பிறந்த நாள்

    இவர் '' தெறி🔥🔥🔥இது என்னோட கோட்டை!இங்கேருந்து ஒரு பிடி மண்ணைக் கூட உன்னால எடுத்து போக முடியாது'' என்று காலா வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    பெட்டிக்குள் அடங்காதவர்

    எந்த சட்டத்திற்குள்ளும் அடங்காத மனிதர்!

    குஷ்பு டிவிட்

    காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு ''சுயமரியாதை என்பது பிறப்புரிமை, ஆனால் இப்போது பலர் அதை மறந்துவிட்டனர். பெரியாரை பற்றி படிப்பது உங்களை மேம்படுத்தட்டும், அவரின் சுயமரியாதை கொள்கையும், வாழ்வதற்கான அடிப்படை உரிமையும், சமஉரிமையும் உங்களுக்கு கிடைக்கட்டும்.'' என்று பெரியாரை நினைவு கூர்ந்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+