ஜம்மு பாகிஸ்தானிலும், காஷ்மீர் சீனாவிலும் உள்ளதாம்: சொதப்பிய ட்விட்டர்
சென்னை: ஜம்மு பாகிஸ்தானில் உள்ளதாகவும், காஷ்மீர் சீனாவில் உள்ளதாகவும் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டதால் மக்கள் கடுப்பாகினர்.
ட்விட்டரில் நாம் ஏதாவது கருத்து தெரிவிக்கையில் நாம் இருக்கும் இடத்தையும் குறிப்பிட முடியும். வியாழக்கிழமை ட்விட்டரை பயன்படுத்திய இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ஜம்மு என்று டைப் செய்தால் அது பாகிஸ்தானில் இருப்பதாக ட்விட்டர் காட்டியது.

மேலும் காஷ்மீர் அல்லது ஜம்மு காஷ்மீர் என்று டைப் செய்தால் அது சீனாவில் இருப்பதாக காட்டியது. இது குறித்து பலர் ட்விட்டர் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் ட்வீட் போட்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்விட்டர் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் வேண்டும் என்றே இந்தியாவுக்கு எதிராக இவ்வாறு செயல்படுவதாக சிலர் விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications