விஜயகாந்த் என்ற பீனிக்ஸ் பறவை சமூகவலைத்தளங்களில் படும் பாடு
சென்னை: தேர்தலில் தோல்வியடைந்தாலும் நான் கலங்க மாட்டேன். சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல எழுவேன் என்று காரைக்குடியில் நடந்த திருமண விழாவில் விஜயகாந்த் பேசினாலும் பேசினார், இன்றைக்கு சமூக வலைத்தளவாசிகளின் வறுவல் அவர்தான். சும்மா வறுத்து எடுத்து விட்டார்கள்.
சும்மாவே ஆடுவார்கள் இன்றைக்கு வெள்ளிக்கிழமை வேறு கூடவே வேப்பிலையும், சலங்கையும் கிடைத்தால் சும்மா விடுவார்களா? விஜயகாந்த் என்ற பீனிக்ஸ் பறவை வகையாக சிக்கிக் கொள்ள ஆள் ஆளுக்கு பீனிக்ஸ் வறுவல் போட ஆரம்பித்து விட்டனர்.
விஜயகாந்த் மட்டுமல்ல இப்போது எல்லாம் வைகோ வேறு வலைத்தளவாசிகளின் கையில் சிக்கிக் கொள்கிறார். இவர்களின் ஓட்டு விழும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் நலக்கூட்டணி இருந்தது. இப்போது வலைத்தளவாசிகளின் ஒரே பொழுதுபோக்கு மநகூவும், தேமுதிக விஜயகாந்தும்தான்.
இதில் பிரேமலதா வேறு கேப்டன் பேசுவதுதான் டுவிட்டரில் ட்ரெண்டு என்று கூறினார். அவர் சொன்னது போலவே காரைக்குடியில் விஜயகாந்த் பேசிய பீனிக்ஸ் பேச்சுதான் ட்ரெண்ட்.
|
பீனிக்ஸ் வறுவல்
வடிவேலுக்கும் விஜயகாந்துக்கும் ஏழாம் பொறுத்தம். இம்சை அரசன் கையில் அகப்பட்ட புறா வறுவல் ஆக்கப்படுவது போல பீனிக்ஸ் வறுவல் ஆக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார் இவர்.
|
தப்ப முடியாது
பீனிக்ஸ் பறவையாக தே.மு.தி.க. எழும் என்று விஜயகாந்த் கூற யார் எந்த ரூபத்தில் வந்தாலும் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று வைகோ கூறுவதாக பதிவிட்டுள்ளார் இந்த வலைஞர்.
|
வடிவேல் கோழி
கந்தசாமி படத்தில் வடிவேல் போட்ட கோழி கெட் அப் படத்தை போட்டு விஜயகாந்த் பீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்த போது... என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.
|
கழுகு சுத்துதே
விஜயகாந்த் என்ற பீனிக்ஸ் பறவையை வீழ்த்த வைகோ என்ற கழுகு சுத்துகிறது என்பது பெரும்பாலான வலைஞர்களின் கருத்தாக உள்ளது. இதையே பலரும் பதிவிட்டுள்ளனர்.
|
அடுத்து எங்கே?
அதே திருமண விழாவில் அடிபட்ட ஹீரோபோல விஜயகாந்த் எழுவார் என்று பிரேமலா கூறியதற்கு பின்னி எடுத்து விட்டனர்.
சட்டசபை தேர்தலில் தோற்ற அணி அடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கு கிளம்புகிறது என்பதை கூறும் வகையில் மீம்ஸ் போட்டு கிண்டலடித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications