தேர்வு எழுத சென்ற 12ஆம் வகுப்பு மாணவிகள் மாயம் - போலீசார் தீவிர விசாரணை
கோவையில் தேர்வு எழுத சென்ற மாணவிகள் திடீரென மாயமாகியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் தேர்வு எழுத சென்ற மாணவிகள் திடீரென மாயமாகியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவிகள் திடீரென மாயமான நிகழ்வு அப்பகுதி பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கண்ணம்பாளையம் சர்வ மத காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் காயத்திரி. ஏ.வி.ஆர். நகரை சேர்ந்த மணிகண்டனின் மகள் சித்ரா. இவர்கள் இருவரும் கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்கள்.

பொதுதேர்வு எழுதுவதற்காக அவர்கள் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றனர். அதன்பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். ஆனால் அங்கு சரியான தகவல் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான மாணவிகளை தேடி வருகின்றனர். மணவிகள் கடத்தப்பட்டனனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications