கரூரில் நின்ற கார் மீதி மற்றொரு கார் மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்
கரூர்: கரூர் அருகே நின்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த கார் வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயெ 3 பேர் பலியானதுடன், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மதுரையிலிருந்து மகேந்திரன்,செல்லாண்டி,செல்வம் உள்ளிட்ட 8பேர் கரூர் அருகேயுள்ள மணவாடி ஆடு சந்தையில் ஆடு வாங்குவதற்காக காரில் வந்து கொண்டிந்தனர்.

அப்போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள மதுரை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தகரக்கொட்டகை என்ற இடத்தில் சிறுநீர் கழிப்பதற்காக காரில் இருந்து இறங்கினர்.

அச்சமயத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த கார் முன்னால் நின்று கொண்டிருந்த கார் மீது வேகமாக மோதியதில் வெளியில் நின்று கொண்டிருந்த மகேந்திரன்,செல்லாண்டி,செல்வம் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் காரில் உள்ளே இருந்த மூன்று பேரும்,பின்னால் வந்த காரின் ஓட்டுனர் உள்ளிட்ட இரண்டு பேர் உள்ளிட்ட 5 பேர் படுகாயத்துடன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications