தேனி அருகே மணல் லாரி மோதி விபத்து: 2 போலீசார் பரிதாபமாக பலி
தேனி அருகே நடந்த சாலை விபத்தில் இரண்டு காவலர்கள் பரிதாபமாக பலியாகினர்.
தேனி: தேனி மாவட்டம் தேவதானபட்டினம் அருகே மணல் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் காவலர்கள் இருவர் பரிதாபமாக பலியாகினர்.
தேனி மாவட்டம் ஊத்துப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் சிவனாண்டி (வயது 30). கூடலூரைச் சேர்ந்த குபேந்திரன் மகன் சங்கீத்குமார் (30) இவர்கள் இருவரும் பழனி பட்டாலியனில் போலீசாக பணிபுரிந்து வருகின்றனர். இன்று அதிகாலை அவர்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர்.

இவர்களது வாகனம் தேனி மாவட்டம் தேவதானபட்டினம் அருகே வந்து கொண்டிருந்த போது, திருச்சியில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் சிவனாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த சங்கீத்குமார் க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications