மெரினா கடலில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பலி.. நண்பனை காப்பாற்ற சென்று சோகம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மீன் பிடிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு- வீடியோ
சென்னை: சென்னை மெரினா கடலில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
சென்னையில் இருக்கும் மெரினாவில் சமீப காலங்களில் சிலர் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சமயங்களில் சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று கடலில் குளித்துக் கொண்டு இருக்கும் போது சுரேஷ், ஆப்ரஹாம் ஆகியோர் கடலில் மூழ்கி மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
அவருடைய நண்பர் ஒருவர் கடலில் மூழ்குவதை போல் இருந்ததை பார்த்து, இவர்கள் காப்பற்ற சென்று இருக்கிறார்கள். அப்போது அலையில் சிக்கி மரணம் அடைந்துள்ளார்கள்.
தற்போது இவர்களது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications