காதலிகளை சினிமாவுக்கு அழைத்த காதலர்கள் – வர மறுத்ததால் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் காதலி சினிமாவுக்கு வர மறுத்ததால் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நகரிலுள்ள ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்யப்பிரியா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

Two Young men got suicide in Coimbatore…

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சத்யப்பிரியா தனது கணவரை சினிமாவுக்கு செல்ல அழைத்துள்ளார். இதற்கு பழனிச்சாமி மறுக்கவே, கோபமடைந்த சத்யபிரியா சாணிப்பவுடரை கரைத்து குடித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதேபோல், நடந்துள்ள மற்றொரு சம்பவம் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாராணி மேற்கொண்டு வருகின்றனர். கோவை, ஹோப்காலேஜ் பகுதியிலுள்ள பி.ஆர்.புரத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் காந்திபுரம், கிராஸ்கட் சாலையில் உள்ள தனியார் வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவர் தனது அலுவலகத்துக்கு அருகிலுள்ள ஒரு பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருவரை காதலித்தார். ஞாயிற்றுக்கிழமை அப்பெண்ணை சினிமாவுக்கு அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவே மனமுடைந்த ஜெய்சங்கர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்விரு சம்பவங்கள் தொடர்பாகவும் பீளமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+