தென்காசி அரசு மருத்துவமனையில் நோயாளி போல நடித்து பிராங்க் வீடியோ.. எல்லை மீறிய 2 இளைஞர்கள் கைது!
தென்காசி: தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிராங்க் செய்து வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யூடியூப் சமூக வலைதளத்தில் சேனல் நடத்துபவர்கள் சிலர் 'பிராங்க் வீடியோ' என்ற பெயரில் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். 'பிராங்க்' வீடியோ எடுக்க போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ள போதிலும், அதை மீறும் வகையில் பல்வேறு பகுதிகளில் பிராங்க் வீடியோக்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பீர் முகம்மது (30), சேக் முகமது (27) ஆகியோர், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிராங்க் செய்து வீடியோ எடுத்துள்ளனர். ஒருவருக்கு கையில் அடிபட்டு கட்டு போட்டிருப்பது போல நடித்து உள்ளனர்.
கட்டுப் போட்ட இளைஞருடன் வந்த மற்றொருவர், அங்கு பணியாற்றும் நபரிடம், “படம் பிடிக்கணும். தியேட்டர் எங்க இருக்கு?” எனக் கேட்கின்றனர். ஸ்கேன் எடுக்கும் இடம் பற்றி கேட்பதாக புரிந்துகொண்ட அவர் அங்கு செல்ல வழி சொல்கிறார். அதற்கு அந்த இளைஞர், “அங்க அமரன் படம் ஓடுதா? வேட்டையன் படம் ஓடுதா?” என நக்கலாக கேட்க, அவர் கோபமடைந்தார்.
பிராங்க் வீடியோ என்ற பெயரில் அரசு மருத்துவமனையில் வந்து நக்கலாகப் பேசியதைப் பார்த்து கோபமடைந்த மருத்துவமனை அதிகாரி, அவர்களை கண்டித்துள்ளார். வீடியோ எடுத்ததைக் கண்டித்த மருத்துவமனை அதிகாரியை அவதூறாகவும் பேசி உள்ளனர். பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மருத்துவமனை அலுவலர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்த பீர் முகம்மது (30), சேக் முகமது (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கேள்வி எழுப்பிய மருத்துவமனை அதிகாரியை அவதூறாகப் பேசியதாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் இதுபோன்று பிராங்க் வீடியோ எடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதிகள், பல்வேறு சிகிச்சை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நோயாளிகள் அதிகளவில் புழங்கும் மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications