இனி அடிக்கடி போராட்ட களத்தில் பார்க்கலாம்... முதன்முறையாக திமுக கொடியுடன் களமிறங்கிய உதயநிதி!

கட்சி வேலையில் முதலில் ஈடுபடுகிறேன் அதை பொறுத்து வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் தாம்பரத்தில் நடைபெறும் திமுக போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    முதன்முறையாக திமுக கொடியுடன் களமிறங்கிய உதயநிதி!

    சென்னை: அரசியலுக்கு வர விரும்புகிறேன், கட்சி வேலையில் ஈடுபடுகிறேன் அதை பொறுத்து வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் இன்று முதன் முதலாக திமுகவின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுடன் தொண்டர்களாக கட்சிக் கொடியை கையில் ஏந்தியவாறு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

    அரசியல் பணிகளில் உழைக்க வாய்ப்பு கொடுங்கள். அரசியல் பார்த்து தான் வளர்ந்தேன், சினிமாவிற்கு வந்ததால் அரசியலில் ஒதுங்க இருந்தேன். அரசியலுக்க வர எனக்கும் ஆர்வம் இருக்கறிது என்று உதயநிதி கூறி இருந்தார்.

    கட்சி வேலை முதலில் செய்கிறேன் வாய்ப்பு கொடுங்கள் என்றும் உதயநிதி கூறி இருந்தார். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என்ற பேச்சுகளும் அடிபட்டு வருகின்றன.

    உதயநிதிஆர்வம்

    உதயநிதிஆர்வம்

    திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு பின்புலமாக இருந்து அவருடைய மருமகன் ஸ்டாலின் பிரச்சார திட்டங்களுக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அவருடைய மகன் நேரடி அரசியலுக்கு வர ஆர்வம் காட்டுவது அரசியல் வட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

    திமுக சார்பில் போராட்டம்

    திமுக சார்பில் போராட்டம்

    இந்நிலையில் தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    போராட்டக்களத்தில் உதயநிதி

    போராட்டக்களத்தில் உதயநிதி

    இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் நடைபெறும் திமுக போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். தொண்டர்களுடன் தொண்டனாக கையில் திமுக கொடியேந்தி கோஷங்களை எழுப்பிய உதயநிதி, இனி அடிக்கடி திமுக போராட்டங்களில் தன்னை பார்க்கலாம் என்றார். உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக திமுக கட்சி கொடியேந்தி வீதிக்கு வந்து போராட்டக்களத்தில் இறங்கியுள்ளார் எஎன்பது குறிப்பிடத்தக்கது.

    அரசியல் ஆர்வம்

    அரசியல் ஆர்வம்

    உதயநிதியின் அரசியல் ஆர்வத்தை பார்க்கும் போது அநேகமாக உள்ளாட்சித் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புகள்அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.
    முரசொலி மாறன் பவள விழா நிகழ்ச்சியின் போது மேடையில் உற்சாகமாக செயல்பட்ட உதயநிதி ஸ்டாலின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு போராட்ட களத்தில் இணைந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+