உளுந்தூர்பேட்டையில் அதிகாலை 3 மணிக்கே திமிறிய ஆடுகள்.. கள்ளக்குறிச்சி, நெல்லையில் வியாபாரிகள் குஷி

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள் மட்டுமல்ல, பல வீடுகளில் அசைவ விருந்தும் முக்கியம். இதனால் பண்டிகைக்கு முன்பாக ஆட்டுச் சந்தைகளில் விற்பனை எப்படி இருக்கும் என்று சொல்லவே வேண்டாம். அந்த வகையில் கள்ளக்குறிச்சி, நெல்லை மாவட்டங்களில் ஆடு விற்பனை ஜரூராக நடந்துள்ளது.. அதிலும் உளுந்தூர்பேட்டையில் நடந்த விற்பனை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது...!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சந்தைக்கு வழக்கத்தை விட அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதிகாலை முதலே வியாபாரிகளும் விவசாயிகளும் சந்தையில் குவியத் தொடங்கினர்.

Ulundurpet Goat Sales

திருச்சி, சேலம், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்க வந்திருந்தனர். பண்டிகை நேரம் என்பதால் ஆடுகளை வாங்குவதில் வியாபாரிகள் இடையே போட்டி நிலவியது.

அதிகாலை 3 மணிக்கே செம விற்பனை

உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் அதிகாலை 3 மணிக்கே விற்பனை தொடங்கியது. சந்தைக்கு வந்த வியாபாரிகள் ஆடுகளைப் பார்த்து, அவற்றின் எடை மற்றும் தரத்துக்கு ஏற்ப விலை பேசி வாங்கிச் சென்றனர்.

ஒரு ஆடு ரூ.7,000 முதல் ரூ.20,000 வரை விற்பனையானது. பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்ததால் சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

3 மணி நேரத்தில் ரூ.3 கோடி வர்த்தகம்

சந்தை தொடங்கிய ஜஸ்ட் 3 மணி நேரத்தில் சுமார் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. குறுகிய நேரத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஆடுகள் விற்பனையானதால் ஆடு வளர்ப்போரும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டிறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை சந்தையில் நடந்த இந்த விற்பனை விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை

இதேபோல், நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை களைகட்டியது. நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன

ஆடுகளின் ரகம் மற்றும் தரத்துக்கு ஏற்ப ரூ.12,000 முதல் ரூ.27,000 வரை விற்பனையானது. ஒரே நாளில் மேலப்பாளையம் சந்தையில் ரூ.1 கோடியே 52 லட்சத்துக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல், சந்தையில் ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாக கோழிகளும் விற்பனையாகின. இதனால் ஆடு மற்றும் கோழி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+